Nokia G42 5G யின் புதிய வேரியன்ட் அறிமுகம், அது என்னனு பாருங்க

Nokia G42 5G யின் புதிய வேரியன்ட் அறிமுகம், அது என்னனு பாருங்க
HIGHLIGHTS

Nokia G42 5G இந்தியாவில் செப்டம்பர் 2023 யில் அறிமுகம் செய்யப்பட்டது,

தற்பொழுது இதன் புதிய 4GB ரேம் வேரியன்ட் அறிமுகம் செயப்பட்டுள்ளது

இந்த போனின் முதல் விற்பனை மார்ச் 8, 2024 அன்று மகளிர் தினத்தன்று இந்தியாவில் நடைபெற உள்ளது,

Nokia G42 5G இந்தியாவில் செப்டம்பர் 2023 யில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்பொழுது இதன் புதிய 4GB ரேம் வேரியன்ட் அறிமுகம் செயப்பட்டுள்ளது, இந்த போனின் முதல் விற்பனை மார்ச் 8, 2024 அன்று மகளிர் தினத்தன்று இந்தியாவில் நடைபெற உள்ளது, இதன் விலை மற்றும் சிர்ரப்பம்சங்களை பார்க்கலாம்.

Nokia G42 5G யின் புதிய வேரியண்டின் விலை தகவல்

Nokia G42 5G யின் விலை பற்றி பேசினால், 4GB RAM/128GB வேரியண்டின் விலை 9,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இந்த போனின் முதல் விற்பனை மார்ச் 8, 2024 அன்று மகளிர் தினத்தன்று இந்தியாவில் நடைபெற உள்ளது, இந்த போன் Grey, Pink, மற்றும் Purple. ஆகிய மூன்று கலர்களில் வருகிறது

G42 5G சிறப்பம்சம்.

Nokia G42 5G யில் 6.56 இன்ச் கொண்ட HD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதன் ரெப்ராஸ் ரேட் 90Hz இருக்கிறது, இதன் டிஸ்ப்ளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரோடேக்சன் வழங்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க: மத்த ஸ்மார்ட்போன் ஓரம் போ பெஸ்ட் ஸ்மார்ட்போன் பட்டதை வாங்கிய Pixel 8 Series

Nokia G42 5G யின் ப்ரோசெசர் பற்றி பேசினால்,இதில் ஒகட்டா கோர் Snapdragon 480 Plus 5G ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இந்த போனில் இதை தவிர 4 ஜிபி ரேம் உள்ளது, இது விர்ச்சுவல் ரேம் மூலம் 2 ஜிபி முதல் 6 ஜிபி வரை அதிகரிக்கலாம். மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது மற்றும் நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு OS சிஸ்டம் மேம்படுத்தல்களையும், 3 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அப்டேட்களையும் வழங்கும்.

கேமரா பற்றி பேசுகையில் Nokia G42 5G பின்புற கேமரா இதில் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இது 20W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தோற்றத்தில் மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் நல்லது. இது 65 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட 2-துண்டு யூனிபாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo