நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பு நிறுவனமான HMD குளோபல் இன்று Nokia G42 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன 2-பீஸ்யூனிபாடி வடிவமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோக்கியா G42 5G யின் பின்புற பேனல் 65% ரிசைகில் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனது. இந்த பட்ஜெட் ஃபோனில் 20W ஃபாஸ்ட் சார்ஜர், கேபிள் மற்றும் பாக்ஸில் ஒரு ஜெல்லி கேஸ் உள்ளது. மேலும் இதன் டாப் அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
Nokia G42 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.12,599 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் So Purple மற்றும் So Grey ஆகிய இரண்டு nira விருப்பங்களில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 15 முதல் Amazon.in இலிருந்து இந்த ஸ்மார்ட்போனை ஆன்லைனில் வாங்கலாம்.
Nokia G42 5G ஆனது 720×1612 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 90Hz அப்டேட் வீதத்தை வழங்கும் 6.56-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்க்ரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 லேயர் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
இந்த கைபேசியில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது,
இது 6ஜிபி ரேம் மற்றும் 5ஜிபி கூடுதல் விர்ச்சுவல் ரேம் உடன் ஆதரிக்கப்படுகிறது. இது தவிர, இந்த ஃபோன் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது, இது மைக்ரோ SD கார்ட் வழியாக 1TB வரை அதிகரிக்கலாம்.
Nokia G42 5G ஒரு டுயள் சிம் ஸ்மார்ட்போன் ஆகும்,அது Android 13 ஒப்பரேட்டிங் சிஸ்டம் கீழ் வேலை செய்யும் ஃபோனில் 2 வருட OS அப்டேட்கள் மற்றும் 3 வருட செக்யுரிட்டி பேட்ச்கள் கிடைக்கும் என்றும் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
கேமராவைப் பற்றி நாம் பேசினால், நோக்கியா G42 5G ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது, இது 50MP ப்ரைமரி சென்சார், 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கப் போகிறது. இது தவிர, செல்ஃபிக்களுக்காக 8எம்பி செல்ஃபி கேமராவும் இந்த போனில் இருக்கும்
Nokia G42 5G ஃபோனில்பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mAh பேட்டரியும் இருக்கும், இது 20W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் பொருத்தப்பட்டுள்ளது.