நோக்கியா பிரியர்களுக்க்க மிகவும் அசத்தலான Nokia G42 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்,

நோக்கியா பிரியர்களுக்க்க  மிகவும் அசத்தலான  Nokia G42 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்,
HIGHLIGHTS

HMD குளோபல் இன்று Nokia G42 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

நோக்கியா G42 5G யின் பின்புற பேனல் 65% ரிசைகில் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனது

Nokia G42 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.12,599 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பு நிறுவனமான HMD குளோபல் இன்று Nokia G42 5G   ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன 2-பீஸ்யூனிபாடி வடிவமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோக்கியா G42 5G யின் பின்புற பேனல் 65% ரிசைகில் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனது. இந்த பட்ஜெட் ஃபோனில் 20W ஃபாஸ்ட் சார்ஜர், கேபிள் மற்றும் பாக்ஸில் ஒரு ஜெல்லி கேஸ் உள்ளது.  மேலும் இதன்  டாப் அம்சங்களை பற்றி  தெரிந்து கொள்வோம் வாங்க.

Nokia G42 %G

Nokia G42 5G: விலை  மற்றும் விற்பனை தகவல்.

Nokia G42 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.12,599 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் So Purple மற்றும் So Grey ஆகிய இரண்டு nira விருப்பங்களில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 15 முதல் Amazon.in இலிருந்து இந்த ஸ்மார்ட்போனை ஆன்லைனில் வாங்கலாம்.

Nokia G42 5G price

Nokia G42 5G யின் டாப் 5 சிறப்பம்சம் 

Nokia G42 5G ஆனது 720×1612 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 90Hz அப்டேட் வீதத்தை வழங்கும் 6.56-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்க்ரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 லேயர் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

Nokia G42 5G ப்ரோசெசர் 

இந்த கைபேசியில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, 

ரேம் மற்றும்  ஸ்டோரேஜ் 

இது 6ஜிபி ரேம் மற்றும் 5ஜிபி கூடுதல் விர்ச்சுவல் ரேம் உடன் ஆதரிக்கப்படுகிறது. இது தவிர, இந்த ஃபோன் 128GB இன்டெர்னல்  ஸ்டோரேஜை வழங்குகிறது, இது மைக்ரோ SD கார்ட் வழியாக 1TB வரை அதிகரிக்கலாம்.

Nokia G42 5G ஒப்பரேட்டிங் சிஸ்டம் 

Nokia G42 5G ஒரு டுயள் சிம் ஸ்மார்ட்போன் ஆகும்,அது  Android 13 ஒப்பரேட்டிங்  சிஸ்டம் கீழ் வேலை செய்யும்  ஃபோனில் 2 வருட OS அப்டேட்கள் மற்றும் 3 வருட செக்யுரிட்டி பேட்ச்கள் கிடைக்கும் என்றும் நிறுவனம் உறுதி செய்துள்ளது. 

Nokia G42

Nokia G42 5G கேமரா 

கேமராவைப் பற்றி நாம் பேசினால், நோக்கியா G42 5G ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது, இது 50MP ப்ரைமரி சென்சார், 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கப் போகிறது. இது தவிர, செல்ஃபிக்களுக்காக 8எம்பி செல்ஃபி கேமராவும் இந்த போனில் இருக்கும்

Nokia G42

Nokia G42 5G பேட்டரி 

Nokia G42 5G ஃபோனில்பேட்டரி பற்றி பேசுகையில் இதில்  5000mAh பேட்டரியும் இருக்கும், இது 20W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் பொருத்தப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo