digit zero1 awards

புதிய அவதாரில் அறிமுகமான Nokia ஸ்மார்ட்போன் 5050mAh பேட்டரி இருக்கும்

புதிய அவதாரில் அறிமுகமான Nokia ஸ்மார்ட்போன் 5050mAh பேட்டரி இருக்கும்
HIGHLIGHTS

சமீபத்தில் HMD Nokia பிராண்டிங்கை அகற்றுவதாக அறிவித்தது.

எதிர்காலத்தில் HMD சொந்த பிராண்டட் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இப்போது நிறுவனம் நோக்கியா ஜி 22 ஐ புதிய கலர் விருப்பத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் HMD Nokia பிராண்டிங்கை அகற்றுவதாக அறிவித்தது. இந்த நிறுவனம் 2016 முதல் நோக்கியா பிராண்டின் உரிமையாளராக இருந்து வருகிறது. இருப்பினும், எதிர்காலத்தில் HMD தனது சொந்த பிராண்டட் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது நிறுவனம் Nokia G22 புதிய கலர் விருப்பத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு HMD யின் அதிகாரப்பூர்வ X (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிடப்பட்டது.

Nokia G22 யின் புதிய கலர்

இந்த ஸ்மார்ட்போன் பயனர் ரிபாயிரபிலிட்டி வசதியுடன் கடந்த ஆண்டு MWC யில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இது Meteor Grey, Pink மற்றும் Lagoon Blue கலர் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கலர் விருப்பம் சோ பீச் என்று அழைக்கப்படுகிறது. இந்த போனின் பின் பேனலில் பீச் கலர் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, மற்ற அனைத்து சிறப்பம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தெரியாதவர்களுக்கு, பீச் ஃபஸ் 2024 ஆம் ஆண்டின் பான்டோன் நிறமாகும்.

Nokia G22 in new color

Nokia G22 விலை தகவல்

எனவே பீச் கலர் விருப்பமானது மற்ற கலர் விருப்பங்களைப் போலவே விலையில் இருக்கும். அதன் பேஸ் 4GB + 64GB வேரியாண்டின் விலை EUR 130 இல் தொடங்குகிறது. இந்த சாதனத்தின் கிடைக்கும் தன்மை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

G22 சிறப்பம்சம்

Nokia G22 யில் 6.5-இன்ச் HD+ டிஸ்பிளே உடன் 90Hz ரெஃப்ரஷ் ரேட் போட்டம் சீன் உடன் வருகிறது மேலும் இதில் மவுன்டெட் பிங்கர்ப்ரின்ட் ஸ்கெனர் மற்றும் ரெக்டங்குளர் கேமரா மாட்யூல் உடன் பின்புறத்தில் 50MP மெயின் மற்றும் 2MP இருக்கிறது

இதையும் படிங்க: Realme அதன் Valentine’s Day Sale இந்த ஸ்மார்ட்போன்களில் சூப்பர் ஆஃபர்

பார்போமான்ஸுக்கு , இந்த போனில் Unisoc T606 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது, இது 4GB RAM மற்றும் 128GB வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர, இது 2ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 2டிபி வரை மைக்ரோ SD சப்போர்ட்டை கொண்டுள்ளது. இது தவிர, இந்த சாதனம் 20W சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5050mAh பேட்டரியில் இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 12 உடன் வருகிறது மற்றும் இரண்டு வருட OS அப்டேட்களையும் வழங்குகிறது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo