நோக்கியா அறிமுகப்படுத்தியது 50MPகேமரா கொண்ட Nokia G11 Plus ஸ்மார்ட்போன்

நோக்கியா அறிமுகப்படுத்தியது 50MPகேமரா கொண்ட Nokia G11 Plus ஸ்மார்ட்போன்
HIGHLIGHTS

பட்ஜெட் ஸ்மார்ட்போனான Nokia G11 Plus அறிமுகப்படுத்தியுள்ளது

புதிய போன் Nokia G11 யின் அப்கிரேட் வெர்சன் ஆகும்

Nokia G11 Plus ற்கான ஆண்ட்ராய்டு அப்டேட்களை மூன்று ஆண்டுகளுக்கு கம்பெனி உறுதியளித்துள்ளது.

ஸ்மார்ட்போன் பிராண்டான நோக்கியா இந்தியாவில் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனான Nokia G11 Plus அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய போன் Nokia G11 யின் அப்கிரேட் வெர்சன் ஆகும். இந்த போன் இந்த ஆண்டு ஜூன் மாதம் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Nokia G11 Plus 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் மூன்று நாட்கள் பேட்டரி ஆயுளை ஆதரிக்கிறது. Nokia G11 Plus ற்கான ஆண்ட்ராய்டு அப்டேட்களை மூன்று ஆண்டுகளுக்கு கம்பெனி உறுதியளித்துள்ளது.

Nokia G11 Plus யின் விலை 

Nokia G11 Plus இரண்டு சார்கோல் கிரே மற்றும் லேக் ப்ளூ வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போன் ஒற்றை ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் விலை ரூ.12,499. கம்பெனியின் ஆஃபீசியால் வெப்சைட் இருந்து போனை வாங்கலாம். கம்பெனி Nokia India வெப்சைட் போனை லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.  

Nokia G11 Plus யின் ஸ்பெசிபிகேஷன்

Nokia G11 Plus 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 90Hz ரிபெரேஸ் ரேட் கொண்டுள்ளது. 20: 9 அஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்பிலே உடன் கிடைக்கிறது. நியர் டு ஸ்டோக் ஆண்ட்ராய்டு 12 Nokia G11 Plus உடன் ஆதரிக்கப்படுகிறது. மேலும், கம்பெனி ஆண்ட்ராய்டு அப்டேட்களை மூன்று ஆண்டுகளுக்கு உறுதியளித்துள்ளது. போன் ஆக்டா-கோர் யூனிசாக் T606 ப்ரோசிஸோர் மற்றும் 4GB RAM உடன் 64GB ஸ்டோரேஜ்  சப்போர்ட் செய்கிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் போனின் ஸ்டோரேஜ் 512GB வரை விரிவுபடுத்தலாம்.

Nokia G11 Plus இல் டூவல் ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதில் பிரைமரி லென்ஸ் 50 மெகாபிக்சல்கள், இது f / 1.8 அப்ச்சர் உடன் வருகிறது. இரண்டாவது லென்ஸ் 2 மெகாபிக்சல் ஆழம். 8 மெகாபிக்சல் பிரான்ட் கேமரா செல்பிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு கிடைக்கிறது.

Nokia G11 Plus இன் பேட்டரி திறன் குறித்து கம்பெனி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் மூன்று நாட்களுக்கு இயக்க முடியும் என்று கம்பெனி கூறியுள்ளது. பேட்டரியுடன் 10W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. Nokia G11 Plus இல் கனெக்ட்டிவிட்டிற்கு, 4G, Wi-Fi, Bluetooth, GPS / A-GPS, USB Type-C port மற்றும் 3.5mm headphone jack ஆகியவை சப்போர்ட் செய்யப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo