HMD Global யின் ப்ளாக்ஷிப் போன் Nokia 9 PureView யின் இந்த போன் இந்த மாதம் இறுதிக்குள் அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ளது. அறிமுகத்திற்க்கு முன்பே Google இந்த ஸ்மார்ட்போனை கொண்டு சில தகவலை வெளியிட்டுள்ளது. கூகுளின் அதிகாரபூர்வ ஆண்ட்ராய்டு என்டர்ப்ரைஸ் கேட்டலாக்கில் Nokia 9 PureView லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பாட்டிலில் போனின் அம்சத்துடன் ஒரு புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளது, இந்த புகைப்படத்தின் படி முன் பேனலில் சில தகவலும் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தில் தெரியும் இந்த போனில் முன் பகுதியில் நோட்ச் இல்லை, இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனில் நோட்ச் கொடுக்கப்படவில்லை என்பது உறுதி ஆகிறது.
இதனுடன் கூகுள் கேட்டலாக்கில் Nokia 9 PureView யின் பட்டியலுடன் ரென்டர் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் இந்த போனின் ஒரு சில சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது Nokia 9 PureView யின் அம்சத்தை பார்த்தால் இதில் 6 இன்ச் டிஸ்பிளே மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது. இதனுடன் இந்த சாதனத்தில் NFC சப்போர்ட் மற்றும் செக்யூரிட்டிக்கு இந்த போனில் பிங்கர்ப்ரின்ட் சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது
அதுவே இதற்க்கு முன்பு லீக் ஆன அறிக்கையின் படி பார்த்தால் Nokia 9 PureView வில் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் Nokia 9 ஸ்மார்ட்போனில் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் சிறந்த லோ லைட் பிளோட்டோகிராபிக்கு உடன் இது சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. லீக் ஆன ரிப்போர்ட்டின் படி இதன் சோப்ட்வர் பற்றி பேசினால் இது ஆண்ட்ராய்டு 9 Pie உடன் வருகிறது.
கூகுளின் லிஸ்ட் படி முதலில் MySmartPrice யில் காணப்பட்டது 24 பிப்ரவரி பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் நிகழ்வின் போது நிறுவனம் நோக்கியா 9 PureView அறிமுகப்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.