ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிப்ரவரி 25-ம் தேதி வெளியிட இருக்கிறது. நோக்கியா 1 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
இவான் பிளாஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நோக்கியா 1 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் புகைப்படம் மற்றும் இதர தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளது. அதன்படி நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு ஒன் எடிஷனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் இம்முறை வெளியாகி இருக்கும் தகவல்கள் ஏற்கனவே வெளியான சிறப்பம்சங்களையை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. புதிய நோக்கியா 7 பிளஸ் வெள்ளை, ஆரஞ்சு மற்றும் கிரே நிறங்களில் வடிவமைக்கப்பட்டு இருப்பதை புதிய புகைப்படங்களில் பார்க்க முடிகிறது.
நோக்கியா 7 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
– 6.0 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– சிங்கிள் / டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
– 12 எம்பி + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ், டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ்
– 16 எம்பி செல்ஃபி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ், f/2.0 அப்ரேச்சர்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– ஃபாஸ்ட் சார்ஜிங்
இத்துடன் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் வெளியாகி இருக்கிறது. மற்ற விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய நோக்கியா 1 ஸ்மார்ட்போனிலும் ஸ்கிரீனை சுற்றி பெரிய பெசல்கள் இடம்பெற்றிருக்கிறது.