digit zero1 awards

நோக்கியா போனின் விலை இந்தியாவில் திடீரென விலை குறைக்கப்பட்டது…!

நோக்கியா போனின் விலை இந்தியாவில் திடீரென  விலை குறைக்கப்பட்டது…!
HIGHLIGHTS

புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டுக்கு முன் HMD . குளோபோல் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது.

சர்வதேச சந்தையில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 2018 மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது, முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் விலை ரூ.1,500 குறைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 21-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டுக்கு முன் HMD . குளோபோல் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. முன்னதாக மே மாதத்தில் நோக்கியா 6.1 பிளஸ் சர்வதேச மாடல் நோக்கியா X6 பெயரில் சீனாவில் வெளியிடப்பட்டது

https://static.digit.in/default/1078f21dd1a97f2120777561bdc869b8838a5779.jpeg

இந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரியுடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதன் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பின் இதே ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டது.

நோக்கியா 6.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 5.8 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2280 பிக்சல் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– 16 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– 4ஜி, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3060 Mahபேட்டரி

தற்போது விலை குறைப்புக்கு பின் 3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ரூ.15,499 மற்றும் 6 ஜிபி ரேம் மாடல் ரூ.17,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பு நோக்கியா அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பதிவிடப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo