Nokia 6.1 Plus ஸ்மார்ட்போன் 15,999 ரூபாயில் அறிமுகமானது…!

Nokia 6.1 Plus  ஸ்மார்ட்போன் 15,999 ரூபாயில் அறிமுகமானது…!
HIGHLIGHTS

இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் எக்ஸ்க்ளுசிவாக E- காமர்ஸ் வெப்சைட்ட்டன பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது

HMD  குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் நோக்கியா X6 என்ற பெயரில் அறிமுகம் செயய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, நாட்ச், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

https://static.digit.in/default/9c35a3f0d6d91d06045ac5e0689e4802aa0757ec.jpeg

இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் எக்ஸ்க்ளுசிவாக E- காமர்ஸ்  வெப்சைட்ட்டன பிளிப்கார்டில்  விற்பனைக்கு வருகிறது இதனுடன் இந்த நோக்கியா  ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 30 அன்று விற்பனைக்கு  வருகிறது 

https://static.digit.in/default/51830e4660d1031412579bdcd1834c04dbbebd48.jpeg

4ஜிபி ரேம் கொண்டிருக்கும் நோக்கியா 6.1 பிளஸ் மாடலில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோவில் வேலை செய்யும் , 16 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா,AI  அம்சங்கள், 16 எம்பி செல்ஃபி கேமரா, AI  அம்சங்கள் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் [பிங்கர்ப்ரின்ட் சென்சார், 2.5D வளைந்த கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம் மற்றும் 3060 mah . பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது..

நோக்கியா 6.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 5.8 இன்ச் 2280×1080 பிக்சல் FHD பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல், EIS
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
– பிங்கரப்ரின்ட் சென்சார்
– 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3060 Mah . பேட்டரி

https://static.digit.in/default/eabd0021a5a8996b712a624ee2d44ae96ad7b3b2.jpeg

இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் கிளாஸ் மிட்நைட் புளு, கிளாஸ் வைட் மற்றும் கிளாஸ் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 30-ம் தேதி முதல் விற்பனை துவங்க இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo