Nokia 6 (2018) ஸ்மார்ட்போன் 4GB ரேம் வகையின் விலை Rs 18,999 உடன் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

Updated on 06-Apr-2018
HIGHLIGHTS

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை துவங்கியுள்ளது. புதிய ஸ்மார்ட்போனிற்கு ஏர்டெல் ரூ.2000 மதிப்புள்ள சலுகைகளை வழங்குகிறது.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 6 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்திருந்தது. சமீபத்தில் இந்தியாவில் வெளியான நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கியுள்ளது.

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் கொண்டுள்ளது. இத்துடன் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ, 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், செய்ஸ் ஆப்டிக்ஸ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, 6000 சீரிஸ் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் நோக்கியாவின் டூயல் சைட், போத்தி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 6 (2018) சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச் 1920×1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட்
– அட்ரினோ 508 GPU
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

நோக்கியா 6 (2018) பிளாக்/காப்பர், வைட்/ஐயன் மற்றும் புளு/ கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஆஃப்லைன் மற்றும் நோக்கியா மொபைல் ஆன்லைன் வலைத்தளத்தில் துவங்குகிறது.

நோக்கியா 6 (2018) அறிமுக சலுகைகள்

– ஏர்டெல் வழங்கும் ரூ.2000 கேஷ்பேக்
– ஏர்டெல் டிவி செயலியை டிசம்பர் 31, 2018 வரை இலவச சந்தா
– மேக் மை ட்ரிப் வழங்கும் 25% தள்ளுபடி
– கோடாக் 811 சேமிப்பு கணக்கை துவங்கி, கூடுதலாக 12 மாதங்களுக்கு காப்பீடு பெற முடியும்
– கிரெடிட் கார்டு, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ஹோம் கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது வட்டியில்லா மாத தவணை பெற முடியும்
– ஐசிஐசிஐ வங்கி சார்பில் மே 31, 2018 வரை 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :