இந்தியாவில் 4GB ரேம் கொண்ட நோக்கியா 6 வெளியானது
HMT. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் 4 GB ரேம் மாடலை வெளியிட்டுள்ளது.
நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் 4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
தற்சமயம் விற்பனை செய்யப்படும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை விட இம்முறை இருமடங்கு அதிக இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கும் நோக்கியா 6 (4 ஜிபி) மாடல் முன்னதாக 3 ஜிபி ரேம்
கொண்டிருந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டன. முன்னதாக நோக்கியா 6 (4 ஜிபி) மாடல் சீனாவில் வெளியிடப்பட்டது. இதேபோன்று சர்வதேச வெளியீட்டிற்கு முன் நோக்கியா 6 சீனாவில் முதற்கட்டமாக வெளியிடப்பட்டது.
Nokia 6 சிறப்பம்சங்கள்:
– 5.5 இன்ச் 1920×1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 430
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஎச் பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
இந்தியாவில் நோக்கியா 6 (4 ஜிபி) விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ரூ.2000 வரை கூடுதல் எக்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. நோக்கியா 6 (4 ஜிபி) மாடலின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெற இருக்கிறது. இதன் விற்பனை பிப்ரவரி 20-ம் தேதி துவங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile