digit zero1 awards

டூயல் கேமரா கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..!

டூயல் கேமரா கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..!
HIGHLIGHTS

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

HMD . குளோபல் நிறுவனம் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மற்ற நோக்கியா போன்களை போன்றே இதுவும் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் தான். கடந்த வாரம் சீனாவில் X5 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P60 12nm சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் பியூட்டி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டுள்ள புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 3000 Mah . பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது .

நோக்கியா 5.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 5.86 இன்ச் 720×1520 பிக்சல் HD பிளஸ், 2.5D வளைந்த கிளாஸ், 19:9 ரக டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm சிப்செட்
– மாலி-G72 MP3 GPU
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, PDAF
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார்
– 3.5 mm  ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3060 Mah. பேட்டரி

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கும் நோக்கியா 5.1 பிளஸ் செப்டம்பர் மாதம் முதல் கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo