Nokia சமீபத்தில் தனது 25வது ஆண்டு விழாவில் நோக்கியா 3210 ஐ உலகளவில் அறிமுகப்படுத்தியது. இந்த போன் சீனாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது, அங்கு மக்கள் அதை விரும்பினர். புதிய நோக்கியா போன் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே விற்றுத் தீர்ந்துவிட்டது. டிவைசை வாங்க மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளது, வேரியன்ட் நோக்கியா 3210 4ஜியின் எந்த வேரியன்ட் கிடைக்கவில்லை. தகவல்களின்படி, இந்த போன் வெறும் ரூ.4,028க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மே 8 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு நாட்களுக்குள், நோக்கியா 3210-ன் மூன்று கலர் வகைகளும் – கருப்பு, நீலம் மற்றும் தங்கம் ஆகியவை விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்த தகவல் நோக்கியாவின் அதிகாரப்பூர்வ வெய்போ (Weibo) ஹேண்டில் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையை பூர்த்தி செய்ய தங்கள் தொழிற்சாலை முழு திறனுடன் செயல்பட்டு வருவதாக ரசிகர்களுக்கு நிறுவனம் உறுதியளித்துள்ளது. மே 31ஆம் தேதி இரவு 8 மணிக்குள் புதிய நோக்கியா போன் out off stock ஆனது.
நோக்கியா 3210 4ஜி டிசைன் முந்தைய மாடலைப் போலவே உள்ளது. ஒரு சில நவீன அப்டேட்களை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இது 4G கனெக்சன் சப்போர்ட் செய்கிறது, மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா உள்ளது. USB டைப்-சி போர்ட்டும் இதில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது சீனாவை மையமாக வைத்து நோக்கியா இந்த போனில் அலிபே மொபைல் பேமெண்ட்டையும் சப்போட் செய்கிறது.
Nokia (2024) 2.4 இன்ச் TFT LCD டிஸ்ப்ளே இருக்கிறது இது யூனிசோக் T107 சிப்செட் பர்போமன்சுக்கு இருக்கிறது, இந்த போனில் S30+ சிஸ்டத்தில் இயங்குகிறது. ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், நோக்கியா 3210 (2024) 64MB ரேம் மற்றும் 128MB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மைக்ரோ SD கார்டு மூலம் இதை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். கனேக்டிவிட்டிக்கு இந்த போனில் புளூடூத் 5.0 சப்போர்ட் செய்கிஈது இதில் 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது. பேட்டரி மற்றும் சார்ஜிங் பற்றி பேசுகையில், நோக்கியாவின் இந்த ஃபீச்சர் போனில் 1,450எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 9.8 மணிநேர பேச்சு நேரத்தை கொடுக்க முடியும். தொலைபேசியில் சார்ஜ் செய்ய USB Type-C போர்ட் உள்ளது. இது தவிர மேலும் பல அம்சங்கள் இதில் இருக்கிறது. தொலைபேசியில் எஃப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயருக்கான ஆதரவும் உள்ளது. தவிர, உன்னதமான சிநேக் கேம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. YouTube Shorts, News, Weather Updates ஆப்களுக்கு மொபைலில் சப்போர்ட் செய்யப்படுகின்றன
இதையும் படிங்க :HMD Arrow குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்