மக்களின் மனதை கவர்ந்த HMD,யின் நிறுவனமான Nokia தனது 25வது வெளியீட்டு ஆண்டு விழாவில் 3210 ஐ மீண்டும் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. ஒரு காலத்தில் பிரபலமான மொபைல் போன் இந்திய சந்தைகளில் மீண்டும் வந்துள்ளது. இந்த ஃபோன் மூன்று போல்ட் மற்றும் விண்டேஜ் கலர்களில் கிடைக்கிறது – ஸ்கூபா ப்ளூ, கிரன்ஞ் கருப்பு மற்றும் Y2K தங்கம். நோக்கியா 3210 தவிர, பிராண்ட் நோக்கியா 235 4ஜி மற்றும் நோக்கியா 220 4ஜி ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியாவின் புதிய ஃபீச்சர் போன் பற்றி இங்கு தெலிவாக பார்க்கலாம்.
விலையைப் பற்றி பேசினால், நோக்கியா 3210 யின் விலை ரூ.3999. நோக்கியா 235 4ஜியின் விலை ரூ.3749 மற்றும் நோக்கியா 220 4ஜியின் விலை ரூ.3249. இந்த மூன்று டிவைஸ் HMD.com மற்றும் இ-காமர்ஸ் தளமான Amazon மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
Nokia 3210 யின் ஒரிஜினல் மாடல் 1999 யில் அறிமுகம் செய்யப்பட்டது, இதில் 1450mAh பேட்டரி உடன் இதில் ஒன்பதரை மணி நேரம் டாக் டைம் வழங்குகிறது இந்த போனில் ஸ்னேக் கேம் மற்றும் இதன் பின்புறத்தில் 2MP கேமரா மற்றும் ஒரு பிளாஷ் டார்ச் வழங்கப்படுகிறது
Nokia 3210 YouTube மற்றும் YouTube Music ஐ ஆதரிக்கிறது. இது தவிர, இது வானிலை, செய்திகள், சோகோபன், கிரிக்கெட் ஸ்கோர், 2048 கேம் மற்றும் டெட்ரிஸ் போன்ற 8 பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. இந்த ஃபோன்களை வாங்கியவர்கள் ஜூன் 20 முதல் யூடியூப் மியூசிக்கைப் பயன்படுத்த முடியும். கூடுதலாக, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஆல் அங்கீகரிக்கப்பட்ட முன் ஏற்றப்பட்ட UPI அப்ளிகேஷனுடன் ஃபோன் வருகிறது, இது எளிதான ஸ்கேன் மற்றும் கட்டண செயல்பாட்டை சப்போர்ட் செய்கிறது மற்றும் ஸ்மார்ட்போன் போன்ற கட்டண அனுபவத்தை வழங்குகிறது.
Nokia 235 4G (2024) யின் சிறப்பம்சம் பற்றி பேசினால், 2.8-இன்ச் IPS டிஸ்ப்ளே மற்றும் ஒரு 2MP பின் கேமரா வழங்கப்படுகிறது, இதில் Unisoc T107 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதில் Nokia S30+ ஒப்பரேட்டிங் சிஸ்டமிளிருந்து வேலை செய்கிறது மேலும் இந்த போனில் 64MB யின் RAM மற்றும் 128MB யின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதை 32GB மூலம் microSD கார்ட் வழியாக அதிகரிக்கலாம்., மேலும் இதில் 1450mAh ரிமூவபில் பேட்டரி வழங்கப்படுகிறது, இது 9.8 மணி நேரம் வரை இயங்கும்.
நோக்கியா 220 4ஜி 2.8 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஃபோனில் UPI பயன்பாடுகள் முன்பே ஏற்றப்பட்டுள்ளன, அவை இந்திய தேசிய கட்டணக் கழகத்தால் (NPCI) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ளலாம். டைப்-சி சார்ஜிங் போர்ட் மூலம் சிறந்த சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இது தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு நீடித்தது. நோக்கியா 220 4ஜி பீச் மற்றும் கருப்பு கலர்களில் வருகிறது.
இதையும் படிங்க: OnePlus Nord CE 4 Lite 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க