digit zero1 awards

Nokia 225 4G 2024 ரெண்டர் தகவல் அறிமுகத்திற்க்கு முன்னே லீக்

Nokia 225 4G 2024 ரெண்டர் தகவல் அறிமுகத்திற்க்கு முன்னே லீக்
HIGHLIGHTS

நோக்கியா நிறுவனம் Nokia 225 4Gயை புதிய பாணியில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது

Nokia 225 4G 2024 யின் ரெண்டர்கள் சில அம்சங்களுடன் ஆன்லைனில் லீக் ஆகியது

நோக்கியா 225 4ஜி 2024 பதிப்பு அதன் 2020 பதிப்பைப் போலவே இருக்கும்

நோக்கியா நிறுவனம் Nokia 225 4Gயை புதிய பாணியில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது, சமீபத்தில், Nokia 225 4G 2024 யின் ரெண்டர்கள் சில அம்சங்களுடன் ஆன்லைனில் லீக் ஆகியது நோக்கியா 225 ரெண்டர்களில் இரண்டு கலர் விருப்பங்களில் காணப்படுகிறது. இது USB Type-C போர்ட் மற்றும் HMD இன் இன்-ஹவுஸ் S30+ OS உடன் பொருத்தப்பட்டிருக்கும். இது 64 எம்பி ரேம் மற்றும் 128 எம்பி சேமிப்பகத்தைப் பெறலாம். வரவிருக்கும் நோக்கியா 225 4ஜி 2024 பதிப்பு அதன் 2020 பதிப்பைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Nokia 225 4G பற்றி இங்கு தெலிவாக பார்க்கலாம்.

Nokia 225 4G 2024 யின் விலை தகவல்.

இதன் விலை பற்றி பேசினால் Nokia 225 4G 2024 யின் விலை யூரோ 100 ஆக இருக்கலாம் (சுமார் ரூ. 8,000). இருக்கும், இது இந்த மாத இறுதியில் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. HMD 2020 யில் நோக்கியா 225 4G ரூ.3,499 விலையில் அறிமுகப்படுத்தியது.

Nokia 225 4G 2024 கலர் மற்றும் டிசைன்

புகழ்பெற்ற டிப்ஸ்டர் ஸ்டீவ் எச். மெக்ஃபீலி (@OnLeaks) ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் உடன் இணைந்து Nokia 225 4G 2024 பதிப்பின் ரெண்டர்கள் மற்றும் சிறப்பம்சங்கள் லீக் ஆகியுள்ளது . லீக் ஆன ரெண்டர்களில், போன் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை-நீல நிறங்களில் காணப்படுகிறது, பின்புறத்தில் HMD மற்றும் நோக்கியா பிராண்டிங் உள்ளது. பிளாஷ் லைட்டுடன் பின்புறத்தில் சிங்கிள் கேமரா சென்சார் காணப்படுகிறது.

Nokia 225 4G 2024 யின் மற்ற சிறப்பம்சங்கள்

Nokia 225 4G 2024 யில் S30+ ஆனது OS யில் இயங்கும் மற்றும் நம்பர் பேடுடன் 2.4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இந்த போனின் பின்புறத்தில் VGA கேமரா அல்லது 3 மெகாபிக்சல் கேமராவைக் காணலாம். இது 64MB ரேம் மற்றும் 128MB ஸ்டோரேஜ் உஅடன் வழங்கப்படலாம். ஃபோனில் 1,450mAh பேட்டரி வழங்கப்படலாம், இது நோக்கியா 225 4G 2020 மாடலின் 1,150mAh பேட்டரியை விட அதிகமாக இருக்கும். நோக்கியா 225 4G ஆனது 2024 இல் USB Type-C போர்ட்டுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3.5mmஹெட்போன் ஜாக்கையும் இதில் காணலாம். புதிய மாடல் பெரிய பேட்டரி மற்றும் USB Type-C போர்ட் தவிர அதன் 2020 மாடலைப் போலவே இருக்கும்.

இதையும் படிங்க:Google Pixel 8a கலர் ஆப்சன் லீக் இமேஜ் வெளியானது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo