Nokia யின் இந்த பீச்சர் போன்கள் அறிமுகம், YouTube Shorts சப்போர்ட் கிடைக்கும்

Updated on 01-May-2024
HIGHLIGHTS

Nokia சந்தையில் புதிய 4G போன் அறிமுகம் செய்துள்ளது நிறுவனம் இப்பொழுது அதன் பீச்சர் போன் புதிய சீரிஸ் கொண்டுவரப்பட்டுள்ளது

இதில் Nokia 215 4G, Nokia 225 4G மற்றும் Nokia 235 4G4ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

இது ஒரு கிளாசிக் T9 கீபோர்ட்கள் கொண்டுள்ளது. பீச்சர் போனாக இருந்தாலும் யூடியூப் ஷார்ட்ஸ் போன்ற ஆப்ஸையும் சப்போர்ட் செய்கிறது

Nokia சந்தையில் புதிய 4G போன் அறிமுகம் செய்துள்ளது நிறுவனம் இப்பொழுது அதன் பீச்சர் போன் புதிய சீரிஸ் கொண்டுவரப்பட்டுள்ளது இதில் Nokia 215 4G, Nokia 225 4G மற்றும் Nokia 235 4G4ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ஃபோன்களிலும் கவர்ச்சிகரமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது மற்றும் குறைந்த விலையை வைத்திருக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு கிளாசிக் T9 கீபோர்ட்கள் கொண்டுள்ளது. பீச்சர் போனாக இருந்தாலும் யூடியூப் ஷார்ட்ஸ் போன்ற ஆப்ஸையும் சப்போர்ட் செய்கிறது சிறப்பு. விலை மற்றும் சிறப்பம்சங்கள் தகவல் பார்க்கலாம்.

Nokia 215 4G, 225 4G, 235 4G price

நிறுவனம் இந்த ஃபீச்சர் போன்களை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியா 215 4ஜியின் விலை $63 (தோராயமாக ரூ. 5,000), நோக்கியா 225 4ஜி விலை $74 (தோராயமாக ரூ. 6,000), நோக்கியா 235 4ஜி விலை $84 (தோராயமாக ரூ. 7,000) ஆகும். அதன் பிறகு, இந்த போன் இந்தியா போன்ற சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

#Nokia 215 4G, 225 4G, 235 4G specifications

Nokia 215 4G, 225 4G, 235 4G specifications

Nokia 215 4G மற்றும் 235 4G யில் 2.8 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது அதுவே Nokia 225 4G பீச்சர் போன் 2.4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இந்த மூன்று மாடல்களும் QVGA ரெசல்யூஷன் டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. Unisoc T107 ப்ரோசெசர் போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன்கள் S30+ ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகின்றன.

Nokia 215 4G யில் கேமரா சென்சார் நிறுவனம் வழங்கவில்லை Nokia 225 4G யில் நிறுவனம் QVGA கேமரா வழங்கப்படுகிறது, அதேசமயம், நோக்கியா 235 4ஜியில் 2எம்பி கேமரா உள்ளது. இவை இணைப்பிற்கான புளூடூத் 5.0க்கான ஆதரவையும் கொண்டுள்ளன. போனில் 1450mAh பேட்டரி உள்ளது. இது ஒரு நீக்கக்கூடிய பேட்டரி. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 9.8 மணிநேர பேச்சு நேரத்தை கொடுக்க முடியும். சார்ஜ் செய்வதற்கு டைப்-சி துணைபுரிகிறது. 3.5மிமீ ஹெட்போன் ஜாக்கும் போனில் உள்ளது. இதில் இரட்டை சிம் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

மற்ற அம்சங்களை பற்றி பேசினால், இந்த போன் க்ளவ்ட் ஆப்ஸ் சப்போர்ட் நிறுவனம் வழங்குகிறது இந்த ஆப்ஸ் மூலம் பயனர்கள் மெசேஜ்கள் வானிலை அறிக்கைகள் போன்றவற்றை போனில் பார்க்கலாம். இது தவிர, நிறுவனம் சமூக ஊடகங்களுக்கான யூடியூப் ஷார்ட்ஸ் சப்போர்டை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க:Airtel வெறும் 148ரூபாயில் 20க்கு மேற்பட்ட OTT சப்ஸ்க்ரிப்சன் மற்றும் அன்லிமிடெட் டேட்டா

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :