50MP கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் Infinix யின் புது ஸ்மார்ட்போன்..

Updated on 23-Jan-2023
HIGHLIGHTS

Infinix நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக டீசர் வெளியிட்டு இருந்தது.

இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜனவரி 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும்

புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Infinix  நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக டீசர் வெளியிட்டு இருந்தது. அந்த வகையில், இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜனவரி 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையில், ஈ-காமர்ஸ் தளம் Zero Book Ultra  லேப்டாப்பின் மைக்ரோசைட்டையும் வெளியிட்டது, அதன் சில விவரக்குறிப்புகளை வெளிப்படுத்துகிறது. இந்த லேப்டாப்பின் சரியான வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் இல்லை என்றாலும். Infinix Zero 5G 2023 மற்றும் Zero Book Ultra ஆகிய இரண்டும் உலக சந்தையில் வந்துள்ளன.

இதில் புது ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இன்ஃபினிக்ஸ் நோட் 12 சீரிசில் – நோட் 12 5ஜி, நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் 4ஜி வேரியண்ட்கள் உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்பஓன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ப்ளிப்கார்ட் தளத்தில் உள்ள தகவல்களின் படி இதன் இந்திய வேரியண்ட் சர்வதேச வெர்ஷனில் உள்ள அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது..

இத்துடன் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், வாட்டர் டிராப் நாட்ச், வைடுவைன் L1 சான்று, 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், 4 ஜிபி ரேம், 3 ஜிபி விர்ச்சுவல் ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த XOS 12 வழங்கப்பட்டுள்ளது..

இந்த ஸ்மார்ட்போன் டூயல் டோன் டிசைன், பேக் பேனலின் ஒருபுறம் கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள பேனலில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் செவ்வக கேமரா மாட்யுல் நேராக பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில் 50MP பிரைமரி கேமரா, டெப்த் லென்ஸ், ஏஐ யூனிட் உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :