Motorola யின் புதிய போனின் அறிமுக தேதி மற்றும் இதிலிருக்கும் சுவாரஸ்ய அம்சம்
Motorola G35 5G அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்
ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் -இ-காமர்ஸ் வெப்சைட்டில் ஒரு போஸ்டரில் லிங்க் செய்யப்பட்டுள்ளது
இந்த போன் க்ரீன்,ரெட் மற்றும் ப்ளாக் கலர் விருப்பங்களில் வரும்
பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான Motorola G35 5G அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை சில ஐரோப்பிய சந்தைகளில் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. இது 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரெட்டுடன் 6.7 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் வேரியன்ட் கொண்டிருக்கும்.
Motorola G35 5G அறிமுக தேதி
ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் -இ-காமர்ஸ் வெப்சைட்டில் ஒரு போஸ்டரில் லிங்க் செய்யப்பட்டுள்ளது அதாவது இந்த போனை டிசம்பர் 10அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது, மேலும் இதன் விலை 10,000ரூபாய் வரையிலான விலை ரேஞ்சில் இருக்கும் நாட்டில் அதன் வகைகள் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களைப் போலவே வேகன் லெதர் டிசைனை கொண்டிருக்கும். மேலும் இந்த போன் க்ரீன்,ரெட் மற்றும் ப்ளாக் கலர் விருப்பங்களில் வரும். இருப்பினும் இந்த போனின் மெமரி ஸ்டோரேஜ் வேரியன்ட் பற்றிய தகவல் இல்லை.
Moto G35 5G சிறப்பம்சம்
மோடோரோலா யின் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் முழு HD + திரையுடன் 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் வீதம் மற்றும் 1,000 நிட்களின் உச்ச பிரகாசம் இருக்கும். கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு இந்தத் திரையுடன் கிடைக்கும். நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
Moto G35 5G யில் ஆண்ட்ரோய்ட்14 யின் கீழ் கொண்டு வரப்பட்டது இந்த போனில் Unisoc T760 சிப்செட் ப்ரோசெசர் உடன் அறிமுகமாகும்
Moto G35 5G ஆனது 50 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸையும், பின்புறத்தில் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஆங்கிள் லென்ஸையும் ஆதரிக்கிறது. Moto G55 இல் OIS ஆதரவும் கிடைக்கும் என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். அதேசமயம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக, Moto G35 5G ஆனது 16 மெகாபிக்சல் முன் கேமராவை சப்போர்ட் செய்யும்.
பவர் பேக்கப்பிற்காக, மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனில் வலுவான 5,000 எம்ஏஎச் பேட்டரி இருக்கும். ஃபோனில் USB Type C போர்ட் உள்ளது மற்றும் இந்த பெரிய பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய, மொபைலில் 18W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கும்.
இதையும் படிங்க:
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile