Motorola Edge 50 Fusion தேதி மற்றும் பல தகவல் லீக்

Updated on 08-May-2024
HIGHLIGHTS

பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான Motorola அடுத்த வாரம் நாட்டில் Edge 50 Fusion அறிமுகப்படுத்தவுள்ளது.

கடந்த மாதம், இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பா உட்பட சில தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா மற்றும் எட்ஜ் 50 ப்ரோவும் கொண்டு வரப்பட்டது. நிறுவனத்தின் Edge 50 Pro ஏற்கனவே நாட்டில் கிடைக்கிறது.

பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான Motorola அடுத்த வாரம் நாட்டில் Edge 50 Fusion அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த மாதம், இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பா உட்பட சில தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா மற்றும் எட்ஜ் 50 ப்ரோவும் கொண்டு வரப்பட்டது. நிறுவனத்தின் Edge 50 Pro ஏற்கனவே நாட்டில் கிடைக்கிறது.

Motorola Edge 50 Fusion லீக் தகவல்.

எட்ஜ் 50 ஃப்யூஷன் மே 16 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று Motorola சோசியல் மீடியா தளமான X யில் ஒரு போஸ்ட்டில் தெரிவித்துள்ளது. இ-காமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட்டில் இதற்கான இறங்கும் வெப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது, அதன் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும்.

இதில் ப்ரோசெசர் பற்றி எப்சுகையில் Snapdragon 7s Gen 2 SoC இதில் ப்ரோசெசராக வழங்கப்படும். இது ஹாட் பிங்க், ஃபாரஸ்ட் ப்ளூ மற்றும் மார்ஷ்மெல்லோ ப்ளூ வண்ணங்களில் கிடைக்கும். இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹலோ யுஐயில் இயங்கும். அதன் 6.7-இன்ச் வளைந்த pOLED டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் மற்றும் 1,600 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் உடன் வரும். இது செக்யுரிட்டிகாக இன்-டிஸ்ப்ளே பின்கர்ப்ரிட் சென்சார் கொண்டிருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம் வரை இருக்கும். இதன் இரட்டை பின்புற கேமரா யூனிட் 50 மெகாபிக்சல் சோனி லைடியா 700 சி ப்ரைமரி கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டரைக் கொண்டிருக்கும். இதன் முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32 மெகாபிக்சல் கேமரா வழங்கப்படும்.

அதன் கனெக்டிவிட்டி விருப்பங்களில் 5G மற்றும் Wi-Fi ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனின் 5,000 mAh பேட்டரி 68 W வேகமாக சார்ஜிங்கை ஆதரிக்கும். நாட்டில் Edge 50 Fusion யின் விலையை நிறுவனம் வெளியிடவில்லை. இது ஐரோப்பாவில் 999 யூரோ (தோராயமாக ரூ. 35,900) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மோட்டோரோலாவின் Razr 50 Ultra விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம். இது Razr 40 அல்ட்ராவை மாற்றும். அதன் லீக் லைவ் இமேஜில் இந்த கிளாம்ஷெல் போல்டபில் ஃபோன் பெரிய செகண்டரி ஸ்கிரீன் மற்றும் ஹோல் பஞ்ச் டிசைனுடன் காணப்படுகிறது. இதில் இரட்டை பின்புற கேமரா அலகு உள்ளது. டிப்ஸ்டர் Sudhanshu Ambhore யின் வரவிருக்கும் Razr 50 Ultra இன் நேரடிப் படங்கள் பகிரப்பட்டன. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட Razr 40 Ultra போலவே தெரிகிறது. இது ஒரு பெரிய இரண்டாம் நிலைக் டிஸ்ப்லேவை கொண்டுள்ளது, மையத்தில் ஒரு துளை பஞ்ச் கட்அவுட் உள்ளது. இந்த ஃபிளிப் ஸ்டைல் ​​மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் உள்ளது. பின்புற கேமராக்கள் அதன் பின் பேனலில் ஹரிசாண்டல் நிறுவப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:iPad Air (2024) 50% அதிக பவர் கொண்ட M2 சிப் உடன் இந்தியாவில் அறிமுகம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :