மோட்டோரோலா நிறுவனம் மிகவும் அசத்தலான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தயாரிக்கிறது

Updated on 11-Mar-2019
HIGHLIGHTS

மோட்டோரோலா சில அம்சங்களை வழங்குவதற்கான சோதனைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக மோட்டோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வடிவமைப்பு ரீதியிலான சிறப்பம்சங்கள் காப்புரிமை விண்ணப்பங்களில் இருந்து வெளியாகி இருந்தது. இந்த போன் பார்க்க மோட்டோ ரேசர் போன்றே காட்சியளித்தது.

அந்த வகையில் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளேவை கொண்டு டேட்டாக்களை ஸ்கிரால் செய்து கொள்ளலாம். மேலும் முதற்கட்டமாக இரண்டாவது டிஸ்ப்ளேவில் குறிப்பிட்ட சில செயலிகளை இயக்குவதற்கான வசதியை மோட்டோரோலா வழங்கும் என தெரிகிறது.

மடிக்கக்கூடிய போன் உருவாவதை மட்டும் டேன் உறுதிப்படுத்தி இருக்கும் நிலையில், ரேசர் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இதன் மூலம் மோட்டோரோலா தனது மடிக்கக்கூடி அலைபேசியினை கோடை காலத்தில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு மாடலில் இருப்பதை போன்று முழுமையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்காது என XDA டெவலப்பர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளேவில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட சிஸ்டம் செயலிகளை மட்டுமே டிஸ்ப்ளே செய்யும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது டிஸ்ப்ளேவினை இயக்க முடியும், எனினும் இந்த நிலையில் பயனர்கள் மோட்டோ டிஸ்ப்ளே, மோட்டோ ஆக்ஷன்ஸ் மற்றும் மோட்டோ கேமரா உள்ளிட்டவற்றையே இயக்க முடியும் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளே டிராக்பேட் போன்றும் இயங்கும் என தெரிகிறது.

மெயின் டிஸ்ப்ளே மற்றும் இரண்டாவது டிஸ்ப்ளேக்களில் வெவ்வேறு வால்பேப்பர்களை வைத்துக் கொள்ள மோட்டோரோலா புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மோட்டோரோலா சில அம்சங்களை வழங்குவதற்கான சோதனைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதை கொண்டு க்ரோம் பிரவுசிங் செய்ய முடியும் என கூறப்படுகிறது. கூடுதலாக இந்த டிஸ்ப்ளேவில் அதிகபட்சம் ஆறு க்விக் செட்டிங்களை காண்பிக்கும் என்றும் இவை டைல் வடிவில் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. எனினும், இதை பயனர்கள் ஸ்கிரால் செய்ய முடியுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :