Motorola Razr Lite யின் CAD போல்டப்பில் போனின் தகவல் லீக் ஆகியுள்ளது.

Motorola Razr Lite யின் CAD போல்டப்பில் போனின் தகவல் லீக் ஆகியுள்ளது.
HIGHLIGHTS

மோட்டோரோலா அதன் மடிக்கக்கூடிய Motorola Razr+ 2023 பிலிப் போனில் வேலை செய்கிறது,

இந்த போன் ஜூன் மாதம் அறிமுகமாகும்,

Motorola Razr Lite ரிலீஸ் செய்வதற்க்கு MySmartPrice மற்றும் டிப்ஸ்டர் Steve Hemmerstofferபார்ட்னர்ஷிப்பாக இருக்கிறது

மோட்டோரோலா அதன் மடிக்கக்கூடிய Motorola Razr+ 2023  பிலிப் போனில் வேலை செய்கிறது, இந்த போன் ஸ்னேப்ட்ரகன் 8+ ஜென்1 சிப் மற்றும் பெரிய கவர் டிஸ்பிளே கொண்ட இந்த போன் ஜூன் மாதம் அறிமுகமாகும், இப்பொழுது ஒரு புதிய அறிக்கையின் படி  Motorola Razr Lite ரிலீஸ் செய்வதற்க்கு MySmartPrice மற்றும் டிப்ஸ்டர் Steve Hemmerstofferபார்ட்னர்ஷிப்பாக இருக்கிறது இந்த சாதனத்தை  Motorola Razr 2023 என்று அழைக்கப்படுகிறது.

"லைட்" மாடலாக இருப்பதால், மோட்டோரோலா ரேசர் லைட் Razr+ 2023க்குக் கீழே நிலைநிறுத்தப்படும். சாதனத்தின் CAD ரெண்டர்கள், இது பஞ்ச்-ஹோல் வடிவமைப்பு மற்றும் மெல்லிய பெசல்களுடன் மடிக்கக்கூடிய ஸ்க்ரீனுடன் பொருத்தப்பட்டிருக்கும் என்பதைக் காட்டுகிறது.

Razr Lite யின் பின்புறத்தில் ஒரு சிறிய கவர் டிஸ்பிளே இருக்கிறது, அதில் நீங்கள் நோட்டிபிகேஷன் அல்லது இன்கம்மிங் கால்கள் மற்றும் மெசேஜிங் போன்ற அலர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் ஒரு LED பிளாஷ் உடன் டுயல் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டோவை பார்க்கையில் Razr Lite யில் ஆண்டெனா கோடுகளுடன் கர்வ்ட் சட்டத்தைக் காட்டுகின்றன. அறிக்கையில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் அல்லது பரிமாணங்கள் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

இதன் அடிப்படையில் மோட்டோரோலா சமீபத்தில் உலக சந்தையில் Edge 40 Proஅறிமுகம் செய்துள்ளது.மற்றும் இப்பொழுது இந்தியாவில் Edge 40 அறிமுகம் செய்வதற்கான தயார் நடந்து வருகிறது.நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த போனில் 6.55-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது இது Full HD+ ரெஸலுசன் மற்றும் 144Hz ரெப்ரஸ் ரேட்  வழங்குகிறது.8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்படும் டைமென்சிட்டி 8020 சிப்செட் மூலம் இயக்கப்படும் முதல் தொலைபேசி இதுவாக இருக்கலாம். 4,400mAh பேட்டரியுடன் 68W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை இந்த போன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது OIS உடன் 50MP பிரைமரி மற்றும் 13MP அல்ட்ராவைடு லென்ஸுடன் இரட்டை கேமரா அமைப்பைக் கொடுக்கலாம், மேலும் இது செல்ஃபிக்காக 32MP பிரான்ட்  கேமரா கொண்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo