Motorola அதன் புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் razr 50 மற்றும் razr 50 Ultra சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது, Razr 50 Ultra ஆனது 6.9-இன்ச் FHD+ போல்டபில் டிச்ப்லேவை கொண்டுள்ளது. இது LTPO pOLED ஸ்க்ரீன் இருக்கும் இது 1 முதல் 165 ஹெர்ட்ஸ் வரை ரெப்ராஸ் வீதத்தை வழங்குகிறது. வெளிப்புறத்தில், ஃபோனில் 4-இன்ச் FHD+ pOLED திரை உள்ளது, இது முந்தைய மோட்டோ ஃபோல்ட் போனுடன் ஒப்பிடும்போது பெரிய மேம்படுத்தலாகும். புதிய Moto Fold போன்கள் Qualcomm Snapdragon 8s Gen 3 ப்ரோசெசரில் இயங்குகிறது. இதன் 4 ஆயிரம் mAh பேட்டரி வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வோம்.
Motorola Razr 50 ஆனது Moon Velvet Black, Elephant Gray மற்றும் Passion Orange கலர்களில் கிடைக்கும். 8ஜிபி + 256ஜிபி மாடலின் விலை 3699 யுவான் அதாவது தோராயமாக ரூ.42,500. 12ஜிபி + 512ஜிபி மாடலின் விலை 3999 யுவான் அதாவது தோராயமாக ரூ.45,945. ஆக இருக்கும்.
motorola razr 50 Ultra விண்டேஜ் டெனிம், மாடர்ன் கிரீன் மற்றும் சாஃப்ட் பீச் லிமிடெட் எடிசன் கலர்களில் கிடைக்கும். இதன் 12ஜிபி + 256ஜிபி மாடலின் விலை 5699 யுவான் அதாவது தோராயமாக ரூ.65,470. 12ஜிபி + 512ஜிபி மாடலின் விலை 6199 யுவான் தோராயமாக ரூ.71,220. இந்த போன்கள் விரைவில் இந்தியாவிற்கும் வரலாம்.
Motorola razr 50 ultra யிலிருந்து ஆரம்பித்தல் இதன் டிஸ்ப்ளே 6.9 இன்ச் யின் FHD+ pOLED LTPO இன்டெர்னல் டிஸ்ப்ளே இருக்கிறது இதன் ரேசளுசன் 2640×1080 பிக்சல் மற்றும் ரெப்ராஸ் ரேட்க்கு நடுவில் இருக்கும், டால்பி விஷனைத் தவிர, இதன் சிறப்பம்சங்கள் 3 ஆயிரம் நிட்களின் ஹை ப்ரைட்னஸ் ஃபோனின் வெளிப்புற டிஸ்ப்ளே 4 இன்ச் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸின் ப்ரோடேக்சன் கொண்டுள்ளது.
இரண்டாவதாக motorola razr 50 யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.9 இன்ச் யின் டிஸ்ப்ளே மற்றும் 120ஹர்ட்ஸ் வரையிலான ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது இதன் பீக் ப்ரைட்னாஸ் 2600 நிட்ஸ் இருக்கிறது. இந்த போனில் 3.6 இன்ச் எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளே இருக்கிறது இது 90 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரெட்டை வழங்குகிறது. இதன் காட்சிக்கு கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
Qualcomm Snapdragon 8s Gen 3 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இது Adreno 735 GPU மற்றும் 12 GB வரை ரேம் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இரட்டை சிம் வசதி உள்ளது, இதில் ஒரு ஸ்லாட் இ-சிம்மிற்கு உள்ளது.
அதுவே motorola razr 50 யில் MediaTek இன் Dimension 7300 ப்ரோசெசர் கொண்டுவரப்பட்டுள்ளது இது 12 ஜிபி வரை ரேம் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14 OSஇயங்குகிறது மற்றும் டூயல் சிம் சப்போர்டுடன் வருகிறது.
கேமரா பற்றி பேசினால், razr 50 Ultra யின் இந்த போனில் OIS உடன் 50 MP ப்ரைம் கேமரா உள்ளது. இது 50 MP 2X டெலிஃபோட்டோ கேமராவால் சப்போர்ட் செய்கிறது முன்புறத்தில் 32 எம்பி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுவே இதன் razr 50 போனில் 50 எம்பி ப்ரைம் கேமரா சென்சார் உள்ளது. இதில் 13 எம்பி அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன் கேமரா 32 மெகாபிக்சல்கள் இருக்கிறது
Razr 50 ultra வில் இந்த போன் 5G ஆகும் இதில் 4,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 44 W டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15 W வயர்லெஸ் சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்யப்படுகிறது. போனின் எடை 189 கிராம் ஆகும்
அதுவே Motorola Razr 50 ஆனது 4200 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 33 W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15 W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது இதை தவிர இதன் இடை 188 கொண்டுள்ளது.
இதையும் படிங்க: Nokia அதிரடி என்ட்ரி, பழைய நினைவுகளை நமக்கு நினைவூட்டும்