Motorola Razr 50 உலகளவில் அறிமுக தேதி வெளியானது

Updated on 18-Jun-2024
HIGHLIGHTS

Motorola அதன் புதிய Razr 50 series சீனாவில் ஜூன் 25 அறிமுகம் செய்ய தயாராக இருக்கிறது

இதில் Motorola Razr 50 Ultra மற்றும் Motorola Razr 50 ஆகியவை அடங்கும்.

இந்த ஃபிளிப் ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய என்ட்ரி ஜூன் 25 ஆம் தேதி நடைபெறும்

Motorola அதன் புதிய Razr 50 series சீனாவில் ஜூன் 25 அறிமுகம் செய்ய தயாராக இருக்கிறது, இதில் Motorola Razr 50 Ultra மற்றும் Motorola Razr 50 ஆகியவை அடங்கும். X யின் சமீபத்திய டீசரில், இந்த ஃபிளிப் ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய நுழைவு ஜூன் 25 ஆம் தேதி நடைபெறும் என்பதை பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. மோட்டோரோலா ரேஸ்ர் 50 சீரிஸின் சிறப்பம்சம் பற்றி இங்கு தெலிவாக பார்க்கலாம்

Motorola Razr 50 ultra சிறப்பம்சம்.

Razr 50 Ultra 4-இன்ச் வைட் கவர் டிஸ்ப்ளே மற்றும் 6.9-இன்ச் இன்னார் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இந்த இரு போனிலும் OLED டெக்நோலாஜி வழங்கப்படுகிறது., இதன் ரேசளுசன் 1272×1080 பிக்சல்கள். அதேசமயம் LTPO AMOLED டிஸ்ப்ளேக்கள் பழைய மாடல்களில் பயன்படுத்தப்பட்டன. ஸ்மார்ட்போன் Snapdragon 8S Generation 3 ப்ரோசெசரில் இயங்கும். இது 8 ஜிபி முதல் 18 ஜிபி வரை ரேம் விருப்பங்களையும், 128 ஜிபி முதல் 1 டிபி வரை ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 3800mAh பேட்டரி வழங்கப்படும். கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், Razr 50 Ultra ஆனது 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவையும், பின்புறத்தில் 50 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவையும் கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும்..

Motorola Razr 50 சிறப்பம்சம்

இதன் மறுபக்கம் Motorola Razr 50 போனில் ஒரு 6.9-இன்ச் இன்னார் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மற்றும் வெளிப்புறத்தில் 3.6-இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போனில் MediaTek Dimension 7300X ப்ரோசெசர் பொருத்தப்பட்டிருக்கும். கேமரா செட்டப் பொறுத்தவரை, மோட்டோரோலா ரேஸ்ர் 50 இன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா இருக்கும். செல்ஃபி எடுக்க 32 மெகாபிக்சல் முன் கேமரா இருக்கும். இது 4200mAh பேட்டரியைக் கொண்டிருக்கும், இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். பேட்டரி நீண்ட கால பயன்பாட்டிற்காகவும், பாஸ்டாக சார்ஜ் செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Motorola-Razr-50

மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ராவை பின்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஸ்மார்ட்போன் ஆரம்பத்தில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது, Snapdragon 8s Gen 3 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே இருந்தது, இது 1.5K ரெசல்யூஷன் மற்றும் 144Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் OIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 3x ஜூம் கொண்ட 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இது 125W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

இதையும் படிங்க: Google Pixel 9 Pro XL யின் கீக்பெஞ்சில் தகவல் லீக்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :