Motorola யின் இந்த போனின் தகவல் கீக்பெஞ்சில் லீக்
மிக பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான Motorola Razr 50 அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது
மோட்டோரோலா ரேசர் 40 யில் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 ப்ரோசெசரக கொடுக்கப்பட்டது
இந்த ஸ்மார்ட்போன் தரப்படுத்தல் வெப்சைட் Geekbench யில் காணப்பட்டது.
மிக பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான Motorola Razr 50 அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது, இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Razr 40 ஐ மாற்றும். மோட்டோரோலா ரேசர் 40 யில் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 ப்ரோசெசரக கொடுக்கப்பட்டது. Motorola Razr 50 ஆனது Mediatek ப்ரோசெசர் கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் தரப்படுத்தல் வெப்சைட் Geekbench யில் காணப்பட்டது.
Motorola Razr 50 லீக் details
Geekbench யின் லிஸ்ட்டிங்கின்படி இது ஆண்ட்ரோய்ட் ஒப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் 8 GB யின் ரேம் இருக்கும், மல்டி-கோர் டெஸ்டிங்கில் 2,751 புள்ளிகளையும், சிங்கிள் கோர் டெஸ்டிங்கில் 1,033 புள்ளிகளையும் பெற்றுள்ளது. அமெரிக்காவில் Motorola Razr 50 யின் விலை $699 ஆக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலா Razr 50 Ultra உடன் அறிமுகப்படுத்தப்படலாம். TENAA யில் உள்ள லிஸ்டின் படி, Motorola Razr 50 ஆனது 3.6-இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே மற்றும் 6.9-இன்ச் OLED முழு HD+ (1,080 x 2,640 பிக்சல்கள்) உள் திரையை 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டுடன் கொண்டுள்ளது.
motorola razr 50 ultra receives the TDRA certification. Global launch imminent.#motorola #motorolarazr50Ultra pic.twitter.com/WKb602Lddh
— Mukul Sharma (@stufflistings) May 13, 2024
இந்த போனில் 50 மேகபிக்சல் ப்ரைமரி கேமரா உடன் இதில் டுயள் கேமரா செட்டப் கொண்டுள்ளது இதில் செல்பி மற்றும் வீடியோ காலுக்கு 32 மேகபிக்சல் கேமரா வழங்கப்படுகிறது , இதில் 3,950mah பேட்டரி வழங்கப்படுகிறது. சமிபத்தில் டிப்ஸ்ட்டர் Steve Hemmerstoffer (@onleaks) யின் மோட்டோரோலா ரேஸ்ர் 50 அல்ட்ராவின் விவரக்குறிப்புகள் மற்றும் விலைகள் கசிந்தன. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு கொண்ட அதன் வேரியண்டின் விலை 999 யூரோ (தோராயமாக ரூ. 83,000) ஆகும். கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட Razr 40 Ultra ஆனதும் இதே விலையைக் கொண்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ, ஹாட் பிங்க் மற்றும் ஸ்பிரிங் கிரீன் கலரில் கிடைக்கும். இதில் 6.9 இன்ச் (1,080 x 2,640 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளே மற்றும் 3.6 இன்ச் கவர் டிஸ்ப்ளே இருக்கலாம்.
Motorola Razr 50 Ultra யில் ப்ரோசெசர் Snapdragon 8s Gen 3 யில் இருக்கலாம், இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருக்கலாம். இதன் டூயல் ரியர் கேமரா யூனிட்டில் 50 மெகாபிக்சல் கேமரா இருக்கலாம். செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 32 மெகாபிக்சல் கேமராவை அதன் முன்பக்கத்தில் வழங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் 4,000 mAh பேட்டரி USB Type-C சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் இருக்கும்.
இதையும் படிங்க Samsung யின் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile