Moto Razr 40 Ultra இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ப்ரோசெசர் மற்றும் 3800mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த கிளாம்ஷெல் போல்டபில் போன் Moto Razr 40 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. Razr 40 Ultra ஆரம்பத்தில் சிங்கிள் ஸ்டோரேஜ் வேரியன்ட் மற்றும் இரண்டு கலர் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த போன் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Razr 40 Ultra ஆனது இந்தியாவில் ஒரு 8GB + 256GB ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கிறது. ஆரம்பத்தில் இந்த போன் Infinite Black மற்றும் Viva Magenta கலர் விருப்பங்களுடன் ரூ.89,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இப்போது இந்த போன் புதிய Glacier Blue வேரியண்டில் வந்துள்ளது மற்றும் Amazon யில் இதன் விலை ரூ.79,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கலர் வேரியன்ட்நிறுவனத்தின் வெப்சைட்டில் பட்டியலிடப்படவில்லை.
மோட்டோரோலாவின் இந்த ஹை எண்டு கிளாம்ஷெல் போல்டபில் ஃபோன் 6.9-இன்ச் ஃபுல் HD+ pOLED இன்னர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 165ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டையும்1200 நிட்ஸ் ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது. இதற்கிடையில், அதன் வெளிப்புறத் ஸ்க்ரீனனது 3.6-இன்ச் pOLED பேனல் ஆகும், இது 144Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 4nm Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் Android 13 இயங்குதளத்தில் இயங்குகிறது.
இதையும் படிங்க Vodafone Idea Vi குறைந்த விலை ரீச்சார்ஜ் திட்டத்தில் கிடைக்கும் பல நன்மை
கேமராவை பற்றி பேசுகையில் இதில் இரட்டை கேமரா செட்டிங் கொண்டுள்ளது, இதில் 12MP OIS ப்ரைமரி சென்சார் மற்றும் 13MP அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை அடங்கும். இது தவிர, 32எம்பி சென்சார் பொருத்தப்பட்ட இன்னர் டிஸ்ப்ளேயில் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா இந்த போனில் 3800எம்ஏஎச் பேட்டரியுடன் பேக் செய்துள்ளது, இது 30W வயர்டு மற்றும் 5W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போன் IP52 மதிப்பீட்டில் வருகிறது. தவிர, பாதுகாப்புக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது