digit zero1 awards

Motorola Razr 40 Ultra மற்றும் Edge 40 Neo புதிய கலர் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்

Motorola Razr 40 Ultra மற்றும் Edge 40 Neo புதிய கலர் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்
HIGHLIGHTS

Motorola Razr 40 Ultra மற்றும் Edge 40 Neo ஸ்மார்ட்போனின் புதிய கலர் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்,

கடந்த மாதம் பீச் ஃபட்ஜ் கலர் விருப்பங்களுடன் இந்த போன்களை உலகளவில் அறிமுகப்படுத்தியது

Motorola Razr 40 Ultra மற்றும் Edge 40 Neo இன் புதிய கலர் மாடல்கள் ஜனவரி 12 முதல் கிடைக்கும்.

Motorola Razr 40 Ultra மற்றும் Edge 40 Neo ஸ்மார்ட்போனின் புதிய கலர் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம், நிறுவனம் கடந்த மாதம் பீச் ஃபட்ஜ் வண்ண விருப்பங்களுடன் இந்த போன்களை உலகளவில் அறிமுகப்படுத்தியது. Motorola Razr 40 Ultra மற்றும் Edge 40 Neo இன் புதிய கலர் மாடல்கள் ஜனவரி 12 முதல் கிடைக்கும். விற்பனை அமேசானில் இருக்கும். Razr 40 Ultra ஆனது Snapdragon 8 Plus Gen 1 செயலியைக் கொண்டுள்ளது. அதேசமயம், இரண்டாவது போனில் MediaTek’s Dimension 7030 செயலி உள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வோம்.

Motorola Razr 40 Ultra, Edge 40 Neo price in India

பீச் ஃபட்ஜ் கலர் Motorola Razr 40 Ultra 69999 ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது, இதன் விற்பனை அமேசானில் நடைபெறும். மேலும், இந்த போனை நிறுவனத்தின் வெப்சைட் மற்றும் ரீடைலர் கடைகளில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் Infinite Black, Viva Magenta மற்றும் Glacier Blue வண்ண விருப்பங்களிலும் வருகிறது.

Motorola Edge 40 Neo ஸ்மார்ட்போன் flipkart மற்றும் மோட்டோ இந்தியா வெப்சைட்டிலிருந்து வாங்கலாம், இதன் விலை ரூ.22999 ஆக வைக்கப்பட்டுள்ளது. இவை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலைகள். 12 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.24999. பீச் ஃபட்ஜ் நிறத்தைத் தவிர, இந்த சாதனம் பிளாக் பியூட்டி, கேனால் பே மற்றும் ஆகியவற்றிலும் வருகிறது.

மோட்டோரோலா Razr 40 Ultra மற்றும் Motorola Edge 40 Neo சியரப்ப்ம்சம்

மோட்டோரோலா பான்டோனுடன் கூட்டு சேர்ந்ததைத் தொடர்ந்து பீச் ஃபட்ஜ் கலர் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Excitel அறிமுகம் செய்தது 400Mbps ஸ்பீட் மற்றும் 17 OTT சப்ஸ்க்ரிப்சன் கொண்டிருக்கும்

Motorola Razr 40 Ultra மற்றும் Motorola Edge 40 Neo ஸ்மார்ட்போன்கள் Android 13 OS இல் இயங்குகின்றன. Razr 40 Ultra ஆனது 6.9-இன்ச் முழு HD+ மடிக்கக்கூடிய pOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 165Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. ஃபோனை மடித்த பிறகு, 3.6 இன்ச் pOLED டிஸ்ப்ளே வெளியில் கிடைக்கிறது, இது 144Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது.

அதேசமயம், மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ 6.55 இன்ச் முழு HD பிளஸ் poLED கர்வ்ட் டிச்ப்லேவை கொண்டுள்ளது. இது 144Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் டுயள் பின்புற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. Motorola Razr 40 Ultra ஆனது 3,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 30W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்பரத் செய்கிறது எட்ஜ் 40 நியோ 5,000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 68W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo