நொடியில் விற்று தீர்த்த Motorola one Power அடுத்த சேல் எப்பொழுது என்று தெரியுமா ?

Updated on 08-Oct-2018
HIGHLIGHTS

. முதல் ஃபிளாஷ் விற்பனை துவங்கிய சில நொடிகளில் விற்று தீர்த்தது அதன் காரணமாக பல பேரால் ஐந்துபிக ஸ்மார்ட்போனை வாங்க முடியாமல் போனதால் இதைத் தொடர்ந்து மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் பவர் மூலம் அந்நிறுவனம் மீண்டும் வெற்றிப்பாதையில் நுழைந்துள்ளது. ஏன்  என்றால் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமான நாளில் இருந்து மக்களுக்கு இதன் மீது கிரேஸ் அதிகம் என்றே சொல்லலாம் அந்த வகையில் தான் இந்த ஸ்மார்ட்போன்  விற்பனைக்கு வந்த சில நொடியில் விற்று தீர்த்தது 

மோட்டோரோலாவின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடலான மோட்டோரோலா ஒன் பவர் முதல் ஃபிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. முதல் ஃபிளாஷ் விற்பனை துவங்கிய சில நொடிகளில் விற்று தீர்த்தது அதன் காரணமாக பல பேரால் ஐந்துபிக ஸ்மார்ட்போனை வாங்க முடியாமல் போனதால்  இதைத் தொடர்ந்து மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஒன் பவர் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வெப்சைட்டில் அக்டோபர் 11 அதிகாலை 12.01 மணி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலாவின் முதல் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் விலை இந்தியாவில் ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா அமைப்பு, முன்பக்கம் 12 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் பவர் சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.12μm பிக்சல்
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.0μm பிக்சல், 4K வீடியோ
– 12 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.25μm பிக்சல்
– கைரேகை சென்சார்
– P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ, டூயல் மைக்ரோபோன்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 5000Mah . பேட்டரி

ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் மற்றும் ஆன்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனாக இருந்தாலும், இதில் மோட்டோரோலா அனுபவங்களை வழங்கும் சில அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. 5000 Mah . பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :