மோட்டோரோலா G7 பவர் 5000mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை உடன் அறிமுகமாகலாம்..!

மோட்டோரோலா G7  பவர் 5000mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை  உடன் அறிமுகமாகலாம்..!
HIGHLIGHTS

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ G7 ஸ்மார்ட்போன்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ G7  ஸ்மார்ட்போன்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.

அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் வெப்சைட்டில் லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களில் புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்கள் வெளியாகி இருந்தது.

புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் XT1955-4 என்ற மாடல் நம்பருடன் சான்று பெற்று இருக்கிறது. இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் 55000mAh  பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் என்.எஃப்.சி. சப்போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மாடல் நம்பர் XT1955-1 பிரேசில் நாட்டிற்கும், XT1955-2 லத்தீன் அமெரிக்காவிற்கும், XT1955-4 மாடலில் என்.எஃப்.சி. வசதி வழங்கப்படவில்லை, XT1955-7 மாடலில் NFC. வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் ஓசன் என்ற குறியீட்டு பெயர் கொண்டிருப்பதாகவும், இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அட்ரினோ 506 ஜி.பி.யு. வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் 2 ஜி.பி., 3 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. ரேம் ஆப்ஷன்களிலும், 32 ஜி.பி. மற்றும் 64 ஜி.பி. என இருவித மெமரி ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர் கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஓன் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும், இதில் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதுதவிர மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே நாட்ச் கொண்டிருக்கும் என்றும், இந்த ஸ்மார்ட்போன் பிளாக், பிளஷ், இன்டிகோ மற்றும் சில்வர் நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo