Motorola போல்டப்பில் போன் RAZR போல கட்சி அளிக்கலாம்
மோட்டோ போல்டப்பில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு ரீதியிலான சிறப்பம்சங்கள் வெளியாகி இருந்தது. இதில் ஸ்மார்ட்போன் பார்க்க மோட்டோ ரேசர் போன்றே காட்சியளித்தது.
மோட்டோரோலா நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. மோட்டோரோலாவின் சர்வதேச சாதனங்களுக்கான துணை தலைவர் டேன் டெரி இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். முன்னதாக மோட்டோ போல்டப்பில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு ரீதியிலான சிறப்பம்சங்கள் வெளியாகி இருந்தது. இதில் ஸ்மார்ட்போன் பார்க்க மோட்டோ ரேசர் போன்றே காட்சியளித்தது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாவதை மட்டும் டேன் உறுதிப்படுத்தி இருக்கும் நிலையில், ரேசர் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
இதன் மூலம் மோட்டோரோலா தனது மடிக்கக்கூடி ஸ்மார்ட்போனினை கோடை காலத்தில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளை சில காலத்திற்கு முன்னதாகவே துவங்கிவிட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதவிர சாம்சங் மற்றும் ஹூவாயின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அற்புதமாக இருக்கிறது என்றாலும், மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வித்தியாசமானதாக இருக்கும் என டேன் தெரிவித்தார். மோட்டோ ரேசர் போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இதுவரை வெளியாகி இருக்கும் போல்டப்பில் ஸ்மார்ட்போன்களை விட வித்தியாசமாக தெரிகிறது.
மோட்டோரோலா டேப்லெட் சாதனங்களை விற்பனை செய்வதில்லை. இதனால் மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எந்த வகையிலும் டேப்லெட் போன்று பயன்படக்கூடியதாக இருக்காது என கூறப்படுகிறது. மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போனில் டூயல்-ஹின்ஜ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile