Motorola அதன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

Updated on 18-Jun-2024
HIGHLIGHTS

Motorola அதன் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Edge 50 Ultra இந்திய சந்தையில் அறிமுகம்

Motorola ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 8s Gen 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது,

Motorola edge 50 ultra விலையை பற்றி பேசினால் இதன் விலை ரூ, 59,999 ஆக இருக்கிறது,

Motorola அதன் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Edge 50 Ultra இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது இந்த ப்ரீமியம் Motorola ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 8s Gen 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இதன் பல அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

Motorola Edge 50 Ultra விலை மற்றும் விற்பனை

Motorola edge 50 ultra விலையை பற்றி பேசினால் இதன் விலை ரூ, 59,999 ஆக இருக்கிறது, இதன் கீழ் லிமிடட் சலுகையின் கீழ் ICICI பேங்க் கார்டுகளுக்கு ரூ.5,000 தள்ளுபடி மற்றும் ரூ.5,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த போனை ஜூன் 24 முதல் Flipkart, motorola.in உள்ளிட்ட ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கலாம்..

#Motorola Edge 50 Ultra

Motorola Edge 50 Ultra டாப் சிறப்பம்சம்.

டிசைன்

Motorola Edge 50 Ultra டிசைன் பற்றி பேசினால்,, இதில் ஒரு தனித்துவமான பேணல் இருக்கிறது, ஒரு இனிமையான வாசனையுடன் ரியல் வூட் போன்ற தோற்றம் அளிக்கிறது இது பீச் ஃபஸ் மற்றும் ஃபாரஸ்ட் கிரே நிறங்களில் வேகன் லெதர் பினிஷ் வகைகளில் கிடைக்கிறது

டிஸ்ப்ளே

இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) FHD+ 10-பிட் OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் ரெப்ராஸ் ரேட் 144Hz ஆகும். இதனுடன், HDR 10+, DC டிம்மிங் மற்றும் 2500 nits ஹை ப்ரைட்னாஸ் கிடைக்கிறது. இதன் டிஸ்ப்ளேவில் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரோடேக்சன் கொடுக்கப்பட்டுள்ளது.

motorola edge 50 ultra features

ப்ரோசெச்ர்

Motorola Edge 50 Ultra யின் இந்த போன் Android 14 யில் இயங்குகிறது மற்றும் இது Qualcomm Snapdragon 8s Gen 3 ப்ரோசெசர் நிறுவப்பட்டுள்ளது. இதில் Adreno 735 GPU உள்ளது. இது 12GB LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

கேமரா

இதன் கேமரா செட்டப் பற்றி பேசினால், மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா 50எம்பி பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இது OIS யின் அம்சத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. 50எம்பி அல்ட்ராவைடு ஆட்டோஃபோகஸ் கேமராவும் உள்ளது, இது 122 டிகிரி பார்வையை உள்ளடக்கும். இது மேக்ரோ கேமராவாகவும் செயல்படுகிறது. மூன்றாவது பின்புற கேமராவில் 64MP போர்ட்ரெய்ட் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. போனில் 50 எம்பி முன் கேமரா உள்ளது.

பேட்டரி

இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால், மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா 4500 mAh ஆகும், இது 125 W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10 W வயர்லெஸ் பவர்ஷேர் ஆகியவற்றை வழங்குகிறது. இது 7 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிடும்.

கனெக்டிவிட்டி

இதன் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இதில் in டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ரீடர், பேஸ் அனலாக் IP68 ரேட்டிங்கை பெற்றுள்ளது. மேலும் இதில் ThinkShield பிஸ்னஸ் கிரேட் செக்யூரிட்டி மற்றும் Moto செக்யூர் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது இதில் கனேக்டிவிட்டிக்கு USB Type-C port, Bluetooth 5.4, Wi-Fi 7, மற்றும் NFC போன்ற சப்போர்ட் வழங்கபடுகிறது இதை தவிர இது .197 கிராம் எடையுள்ளது.

இதையும் படிங்க: Motorola Razr 50 உலகளவில் அறிமுக தேதி வெளியானது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :