Motorola யின் இந்த போனில் அதிரடியாக 7000 வரை டிஸ்கவுன்ட்

Updated on 12-Dec-2024
HIGHLIGHTS

Motorola Edge 50 Pro 5G ஆனது Flipkart இல் ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.

Motorola Edge 50 Pro 5G யின் 2GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 31,999ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது

இந்த போன் அதன் வெளியீட்டு விலையை விட ரூ.7500 குறைந்த விலையில் கிடைக்கிறது.

Motorola அதன் ப்ளாக்ஷிப் போன் வாங்க நினைத்தால் இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும். Motorola Edge 50 Pro 5G ஆனது Flipkart இல் ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. இ-காமர்ஸ் தளமானது இந்த போனின் விலைக் குறைப்புகளை வழங்குகிறது, பேங்க் சலுகைகளை வழங்குகிறது மற்றும் பழைய அல்லது ஏற்கனவே உள்ள தொலைபேசியைத் திரும்பப் பெறும்போது கூடுதல் பரிமாற்றச் சலுகைகள் மூலம் சேமிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜியில் கிடைக்கும் டீல்கள் மற்றும் சலுகைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Motorola Edge 50 Pro 5G விலை

ப்ளிப்கார்டில் Motorola Edge 50 Pro 5G யின் 2GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 31,999ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதுவே 12GB RAM/256GB வேரியன்ட் அறிமுகம் செய்யும்போது 35,999ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது, பேங்க் ஆபரின் கீழ் IDFC Bank கிரெடிட் கார்ட் வாங்கினால் 3,500ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு நடைமுறை விலை ரூ.28,499 ஆக மாறும். இந்த போன் அதன் வெளியீட்டு விலையை விட ரூ.7500 குறைந்த விலையில் கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகை ரூ.20,150 கூடுதல் சேமிப்பிற்கு வழிவகுக்கும். இருப்பினும், கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச பலன் எக்ச்செஞ்சில் கொடுக்கப்பட்ட போனை பொறுத்தது

Motorola-Edge-50-Pro-5G-1-1.jpg

Motorola Edge 50 Pro சிறப்பம்சம்

Motorola Edge 50 Pro யில் 6.7 இன்ச் 1.5K pOLED கர்வ்ட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதில் 144Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, இதனுடன் இதில் HDR10+ மற்றும் 2,000நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் இருக்கிறது, மேலும் இந்த போனில் Qualcomm Snapdragon 7 Gen 3 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த போனில் 12GB RAM மற்றும் 256GB இன்பில்ட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.Motorola யின் இந்த போன் ஆண்ட்ரோய்ட் 14 அடிபடையின் கீழ் Hello UI யில் வேலை செய்கிறது.

இப்பொழுது கேமரா செட்டிங் பற்றி பேசுகையில் இந்த போனின் பின்புறத்தில் OIS சப்போர்டுடன் வரும் 50மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உடன் இதில் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த போனில் 4,500mAh பேட்டரி உடன் 125W டர்போ பவர் சார்ஜிங் மற்றும் 50W வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது, மற்ற அம்சங்கள் பற்றி பேசினால், டால்பி அட்மொஸ், டுயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் IP68 ரேட்டிங் அடங்கியுள்ளது இது டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் வசதி வழங்குகிறது.

இதையும் படிங்க:Daiwa யின் இரண்டு ஸ்மார்ட்டிவி வெறும் ரூ,7,499 யில் இந்தியாவில் அறிமுகம், இதன் அம்சங்கள் பார்த்தா அசந்து போவிங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :