Motorola edge 50 ஸ்மார்ட்போன் அறிமுகம் இந்த மிலிட்டரி கிரேட் யின் டாப் அம்சம்

Updated on 01-Aug-2024
HIGHLIGHTS

Motorola அதன் Motorola edge 50 புதிய போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

இந்த போனில் IP68 மிலிட்டரி க்ரேட் சான்றிதழைக் கொண்ட உலகின் மிக மெல்லிய போன் இது என்று கூறப்படுகிறது

இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை பற்றி பார்க்கலாம்

Motorola அதன் Motorola edge 50 புதிய போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இந்த போனில் IP68 மிலிட்டரி க்ரேட் சான்றிதழைக் கொண்ட உலகின் மிக மெல்லிய போன் இது என்று கூறப்படுகிறது. புதிய மோட்டோ போனில் 1.5K கர்வ்ட் டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இது சோனி கேமரா உடன் வருகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்களை பற்றி பார்க்கலாம்.

Motorola edge 50 விலை தகவல்

Motorola edge 50 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது இது ஜங்கிள் கிரீன், பீச் ஃபட்ஜ் ஆகிய மூன்று கலர் வகைகளில் கிடைக்கும். இது பிரீமியம் வீகன் லெதர் ஃபினிஷுடனும் இருக்கலாம். இதன் விற்பனை ஆகஸ்ட் 8 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் Flipkart, Motorola.in மற்றும் ரீடைளர் விற்பனைக் கடைகளில் நடைபெறும்.

Motorola edge 50 யின் விலையை பற்றி பேசினால் இது ரூ.27,999. ஆகா இருக்கிறது ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு EMI ட்ரேன்செக்சன் ரூ.2,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும். இது நடைமுறை விலையை ரூ.25,999 ஆக்குகிறது.

Motorola edge 50 டாப் அம்சம்

டிஸ்ப்ளே:

Motorola edge 50 யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் 6.7 இன்ச் பொலிட் டிஸ்ப்ளே உள்ளது. இது 1.5K தெளிவுத்திறனை வழங்குகிறது. டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1200 நைட்ஸ் உச்ச பிரகாசம். டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 இன் ப்ரோடேக்சன் பெற்றுள்ளது.

ப்ரோசெசர்:

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 AI(எக்சிலரேட்டட் வெர்சன் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் மற்றும் 256ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பற்றி பேசுகையில், இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹலோ யுஐயில் இயங்குகிறது.

கேமரா:

கெமர பற்றி பேசுகையில் Motorola edge 50 யில் 50MP Sony-Lytia 700C ப்ரைமரி சென்சார், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் அல்ட்ராவைட் ஆங்கிள் லென்ஸுடன் இணைக்கப்பட்ட 13MP சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய AI சப்போர்டுடன் டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டை இது வழங்குகிறது. இது தவிர, செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Motorola Edge 50

பேட்டரி:

பேட்டரி பற்றி பேசுகையில் இந்த போனில் இயக்க, 68W டர்போசார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது மற்றும் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது

கனெக்டிவிட்டி:

விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.2, NFC, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இது தவிர, இந்த போனில் Dolby Atmos சப்போர்டுடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது MIL-810H மிலிட்டரி தர சான்றிதழைக் கொண்டுள்ளது, இந்த போன் தீவிர வெப்பநிலை மற்றும் பிற அச்சுறுத்தல்களைத் தாங்கும் என்பதை உறுதி செய்கிறது. இது தவிர, அப்டேட்டிர்க்காக போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:POCO M6 Plus 5G இந்தியாவில் அறிமுகம் டாப் அம்சம் கேமராவில் இவ்ளோ விஷயமா

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :