Motorola Edge 40 Pro) ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவின் வாரிசு என்று கூறப்படுகிறது. இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 165Hz poOLED டிஸ்ப்ளே உள்ளது. போனில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அலகு உள்ளது. இந்த ஃபோன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 ப்ரோசெசரை கொண்டுள்ளது. ஃபோனில் 4600 mAh பேட்டரி உள்ளது, இது 125W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை EUR 899.99 (தோராயமாக ரூ. 80,500) ஆகும். இந்த போன் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் மற்றும் லூனார் ப்ளூ வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் அடுத்த வாரம் முதல் ஐரோப்பாவில் விற்பனைக்கு கிடைக்கும். இது அடுத்த சில வாரங்களில் லத்தீன் அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளையும் அடையலாம்.
இந்தியாவில் இந்த போன் அறிமுகம் தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவிற்கு வரும், இது இந்தியாவில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிப்படை 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ரூ.49,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
டூயல் சிம் (eSIM+Physical SIM) ஸ்லாட்டுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது. ஃபோன் 20:9 என்ற ரேஷியோவுடன் 165Hz அப்டேட் வீதத்தைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளே 6.67-இன்ச் மற்றும் முழு-எச்டி+ (1,080×2,400 பிக்சல்கள்) ரெஸலுசனை வழங்குகிறது. டிஸ்ப்ளே மற்றும் ரியர் பேனல் இரண்டும் நிறுவனத்தால் 3டி கர்வ்ட் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் பிங்காரப்ரின்ட் ரெஸிஸ்டண்ட் பிணிசுடன் பாதுகாக்கப்படுகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோவில் 12ஜிபி LPDDR5 ரேம் உள்ளது மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 ப்ரோசெசர் போனில் கொடுக்கப்பட்டுள்ளது , இது ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கானது. கேமராக்கள் பற்றி பேசினால், எட்ஜ் 40 ப்ரோ 50 மெகாபிக்சல் ப்ரைம் சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதனுடன், 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 60 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் பொருத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏ/பி/ஜி/என்/ஏசி/எக்ஸ், ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களுடன் வருகிறது. ஃபோனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளது. போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது IP68 ரேட்டிங்குடன் வருகிறது, அதாவது நீர் சேதத்தை அதிக அளவில் தாங்கும்.
மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ 125W டர்போபவர் வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. போனின் எடை 199 கிராம்.