digit zero1 awards

Moto X50 Ultra தகவல் TENAA பக்கத்தில் சிறப்பம்சம் லீக்

Moto X50 Ultra தகவல் TENAA பக்கத்தில் சிறப்பம்சம் லீக்
HIGHLIGHTS

Motorola சீன சந்தைக்கான Moto X50 Ultra  யில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த போனில் Snapdragon 8s Gen 3 SoC உடன் வரும். அறிமுகத்திற்கு முன்னதாக, வெளியாகியது

சீனாவின் TENAA வெப்சைட்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Motorola சீன சந்தைக்கான Moto X50 Ultra  யில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் போன் Snapdragon 8s Gen 3 SoC உடன் வரும். அறிமுகத்திற்கு முன்னதாக, மோட்டோரோலாவின் வரவிருக்கும் போன் சில சிறப்பம்சங்கள் மற்றும் போட்டோக்களுடன் சீனாவின் TENAA வெப்சைட்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்ச் ஹோல் கட்அவுட்டுடன் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டதாக Moto X50 அல்ட்ராவை லிஸ்ட்டில் வெளிப்படுத்துகிறது. Moto X50 Ultra ஆனது Motorola Edge 50 Ultra யின் சீன மாறுபாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஏப்ரல் தொடக்கத்தில் ஐரோப்பா உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. Moto X50 Ultra பற்றி இங்கு தெளிவாக பார்க்கலாம்.

Moto X50 Ultra லீக் தகவல்.

Motorola யின் ஒரு ஸ்மார்ட்போன் மாடல் எண் XT2401-2 கொண்ட TENAA யில் காணப்பட்டது. இந்த மாடல் எண் Moto X50 Ultra உடன் தொடர்புடையதாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. பட்டியலில் உள்ள புகைப்படம், ஸ்மார்ட்போன் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ராவைப் போலவே இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

செல்ஃபி ஷூட்டரை வைப்பதற்காக மேலே ஒரு அப்ரட்ஜர் பஞ்ச் கட்அவுட்டுடன் கர்வ்ட் ஸ்க்ரீனை வைத்திருப்பது போல் தெரிகிறது. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வலது பக்கத்தில் உள்ளன. மோட்டோ X50 அல்ட்ரா போட்டோ மேல் இடது மூலையில் பெரிய ரெக்டங்குளர் பின்புற கேமரா ஐலேண்ட் காட்டுகிறது. LED ப்ளாஷ் கொண்ட மூன்று கேமராக்கள் இருக்கும் என்று தெரிகிறது. மோட்டோ லோகோ பின்புறத்தில் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

MySmartPrice மூலம் TENAA லிச்ட்டிங்கில் சில மற்ற ஸ்க்ரீன்ஷாட் ஷேர் செய்யப்பட்டுள்ளது, இதில் Moto X50 Ultra 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது 8GB, 12GB, 16GB மற்றும் 18GB RAM மற்றும் 128GB, 256GB, 512GB மற்றும் 1TB ஸ்டோரேஜ் விருப்பங்களில் வரும்.

இது 3.19GHz ஹை ப்ரிகுவன்ஷி கொண்ட ஆக்டா-கோர் ப்ரோசெசர் கொண்டிருக்கலாம். இது Qualcomm Snapdragon 8s Gen 3 ப்ரோசெசரக இருக்கலாம். டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் மற்றும் 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

Moto X50 Ultra ஆனது 4,365mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. டைமென்சன் பொறுத்தவரை, அதன் நீளம் 161 மிமீ, அகலம் 72.4 மிமீ, தடிமன் 8.5 mm மற்றும் எடை 197 கிராம். மோட்டோ எக்ஸ்50 அல்ட்ரா, மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ராவின் சீன வேரியன்ட் என நம்பப்படுகிறது. எட்ஜ் 50 அல்ட்ரா கடந்த மாதம் EUR 999 (தோராயமாக ரூ. 88,900) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: Motorola Edge 50 Fusion தேதி மற்றும் பல தகவல் லீக்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo