Moto யின் இந்த போனை குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Moto யின் இந்த போனை குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Motorola யின் அதன் G சீரிஸ் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் வாங்க உங்களுக்கு மிகவும் அற்புதமான வாய்ப்பாக இருக்கும், ஏன் என்றால் இப்பொழுது இந்த Moto G85 5G போனின் விலை இப்பொழுது குறைக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் ரூ. 17,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது ஏற்கனவே ஸ்மார்ட்போனுக்கு நல்ல விலையாக இருந்தது, ஆனால் இப்போது நீங்கள் அதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.மேலும் இந்த போனின் ஆபர் மற்றும் அம்சங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

Moto G85 5G மிக குறைந்த விலையில்

தற்போது, ​​இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.17,999க்கு பிளிப்கார்ட்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . இருப்பினும், நீங்கள் அதை கவனமாகப் பார்த்தால், ஈ-காமர்ஸ் தளம் பல பேங்க் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளையும் வழங்குகிறது. எந்த பேங்க் கிரெடிட் கார்டையும் பயன்படுத்தி இந்த போனில் ரூ.1000 தள்ளுபடி பெறலாம். ஆனால் நீங்கள் அதை EMI மூலம் வாங்க விரும்பினால், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.1500 வரை தள்ளுபடி பெறலாம்.

இது தவிர, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலமும் விலையை மேலும் குறைக்கலாம். உங்களிடம் பழைய போன் எந்த சேதமும் இல்லாமல் செயல்படும் நிலையில் இருந்தால், Flipkart Moto G85 5G-யில் ரூ.12,100 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை வழங்குகிறது.

Moto G85 5G-சிறப்பம்சம்.

மோட்டோ G85 6.67-இன்ச் FHD+ pOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 10-பிட் வண்ணம் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது. இது 12GB வரை RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் இணைக்கப்பட்ட Snapdragon 6s Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

போட்டோ எடுப்பதற்கு, 50MP ப்ரைம் கேமரா மற்றும் 8MP அல்ட்ராவைடு லென்ஸ் உள்ளிட்ட இரட்டை கேமரா செட்டிங் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக, இந்த சாதனம் 33-வாட் பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5000mAh பேட்டரியில் இயங்குகிறது.

இதையும் படிங்க: Motorola யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுன்ட் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo