Moto யின் புதிய போன் அறிமுகம், இதன் டாப் அம்சம் பாருங்க

Moto யின் புதிய போன் அறிமுகம், இதன் டாப் அம்சம் பாருங்க
HIGHLIGHTS

Motorola இந்திய சந்தையில் Moto G75 5G யின் புதிய போனை அறிமுகம் செய்தது

இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 3 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது.

Moto G75 5G யின் அம்சங்கள் மற்றும் , விலை போன்றவற்றைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Motorola இந்திய சந்தையில் Moto G75 5G யின் புதிய போனை அறிமுகம் செய்தது, மிட் ரேன்ஜின் 5G ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 3 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. Moto G75 5G யின் அம்சங்கள் மற்றும் , விலை போன்றவற்றைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Moto G75 5G சிறப்பம்சம்

டிஸ்ப்ளே

Moto G75 5G யில் 6.78 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதன் ரேசளுசன் 2388×1080 பிக்சல் ப்ரைட்னாஸ் இருக்கிறது மேலும் இதன் ரெப்ராஸ் ரேட் 120Hz, 240Hz டச் செம்பளிங் ரேட் 1000நிட்ஸ் வரை இருக்கிறது இதன் டிஸ்ப்ளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சன் கொடுக்கப்பட்டுள்ளது

ப்ரோசெசர்

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் Qualcomm Snapdragon 6 Gen 3 6nm 5G கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 256ஜிபி UFS 2.2 சேமிப்பிடம் பொருத்தப்பட்டுள்ளது, இதை மைக்ரோ SD கார்டு வழியாக 1TB வரை அதிகரிக்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14ல் வேலை செய்கிறது.

கேமரா

கேமரா பற்றி பேசுகையில் இந்த போனில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் f/1.8 அப்ரேட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் f/2.2 அப்ரேட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா கொண்டுள்ளது. முன்புறத்தில், f/2.45 அப்ரேட்ஜர் கொண்ட 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

இதன் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mAh பேட்டரியுடன் 30W டர்போ சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

கனெக்டிவிட்டி

இதன் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இதில் ஸ்டிரீயோ ஸ்பீக்கர், டால்பி அடம்ப்ஸ் மற்றும் டுயல் மைக்ரோபோன் இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஃபோன் IP68 மதிப்பீட்டுடன் வருகிறது, இது தவிர MIL-STD-810H சான்றளிக்கப்பட்டது. டைமென்சன் பற்றி பேசுகையில், இந்த போனின் நீளம் 166.09 mm, அகலம் 77.24 mm, திக்னஸ் 8.34 mm மற்றும் எடை 208 கிராம் ஆகும் இதை தவிர இதில் 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் 5.4, GPS, USB Type C போர்ட் மற்றும் NFC ஆகியவை அடங்கும்.

Moto G75 5G விலை மற்றும் விற்பனை

Moto G75 5G Charcoal Grey (matte), Aqua Blue, மற்றும் Succulent Green (vegan leather) ஷெட்களில் வழங்குகிறது அதை PLN 8,999 ($397) அல்லது 369 யூரோக்களுக்கு வாங்கலாம். இந்த போன் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளது. 5. இது இந்தியா மற்றும் சீனா உட்பட பல சந்தைகளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

source

இதையும் படிங்க:Lava Agni 3 இந்தியாவில் இந்த தேதியில் அறிமுகமாகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo