Moto G73 5G ஸ்மரட்போன் அசத்தலான கேமரவுடன் அறிமுகம் இதன் விலை ஆபர் சலூகாயை தெருஞ்சிக்கவங்க.

Updated on 10-Mar-2023
HIGHLIGHTS

மோட்டோரோலா தனது மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான மோட்டோ ஜி73 5ஜியை இந்தியாவில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது

Moto G73 5G ஆனது 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 930 செயலியைக் கொண்டுள்ளது

மோட்டோரோலா தனது மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான மோட்டோ ஜி73 5ஜியை இந்தியாவில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்த போன் இரண்டு வண்ண விருப்பங்களில் மற்றும் 20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Moto G73 5G ஆனது 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 930 செயலியைக் கொண்டுள்ளது. போனில் 5,000mAh பேட்டரி மற்றும் வேகமாக சார்ஜிங் ஆதரவு உள்ளது. அதே நேரத்தில், திங்க்ஷீல்ட் மொபைல் பாதுகாப்பும் போனுடன் கிடைக்கிறது. போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்…

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

மோட்டோ G73 5ஜி ஸ்மா்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் லுசெண்ட் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை மார்ச் 16 ஆம் தேதி ஃப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. 

அறிமுக சலுகைகள்:

கிரெடிட் கார்டு மற்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி அல்லது உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியை பெறலாம்.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ. 5 ஆயிரத்து 050 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ்கள், மிந்த்ரா மற்றும் ஜூம்இன் சேர்த்து ரூ. 1050 வரையிலான கேஷ்பேக், ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான கேஷ்பேக் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு உள்ளன.

Moto G73 5G சிறப்பம்சம்.

புதிய மோட்டோ G73 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மோட்டோ G73 5ஜி மாடலில் 6.5 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 930 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டிமென்சிட்டி 930 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை மோட்டோ G73 5ஜி பெற்று இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ G73 5ஜி ஆண்ட்ராய்டு 14+ அப்டேட், மூன்று ஆண்டுகள் ஆண்ட்ராய்டு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆட்டோஃபோக்கஸ் கேமரா, 16MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :