Moto யின் இந்த போனின் தேதி மற்றும் தகவல் லீக் வெளியானது 6000mAh பேட்டரி இருக்கும்
Moto G64 5G யின் ஏப்ரல் 16 இந்தியாவில் அறிமுகமாகும்
மோட்டோரோலா தனது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இந்த போனை லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது
Motorola யின் Moto G64 5G முழு சிறப்பம்சங்களும் வெளிவந்துள்ளது
Moto G64 5G யின் ஏப்ரல் 16 இந்தியாவில் அறிமுகமாகும், இப்போது, அறிமுகத்திற்கு முன்னதாக, மோட்டோரோலா தனது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இந்த போனை லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது அதன் அனைத்து சிறப்பம்சங்கள் வெளிப்படுத்துகிறது. Moto G64 5G ஆனது மூன்று கலர் விருப்பங்கள் மற்றும் இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கட்டமைப்புகளில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது MediaTek Dimensity 7025 SoC உடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, Moto G64 5G ஆனது 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
Moto G64 லீக் details
அதன் இந்திய வெப்சைட்டில் ஒரு லிஸ்ட் மூலம் Motorola யின் Moto G64 5G முழு சிறப்பம்சங்களும் வெளிவந்துள்ளது, இது ஐஸ் லிலாக், புதினா பச்சை மற்றும் முத்து நீல வண்ண விருப்பங்கள் மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்களில் காட்டப்பட்டுள்ளது. இது octa-core MediaTek Dimensity 7025 SoC யில் வேலை செய்யும்.
Stop worrying about battery life and start living your life to the fullest! 🚀 #MotoG64 5G boasts segment-best 6000mAh battery, delivering unmatched performance.📱⚡
— Motorola India (@motorolaindia) April 11, 2024
Launching 16th April @Flipkart, https://t.co/azcEfy2uaW & all leading retail stores.#UnleashTheBeast
Moto G64 5G யில் Android 14-அடிபடையின் கீழ் My UX இருக்கிறது மேலும் இது Android 15 மற்றும் மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது 120Hz அப்டேட் வீதத்துடன் 6.5-இன்ச் முழு-HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஃபோனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் 8 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டருடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி பின்புற சென்சார் உள்ளது. முன் கேமரா 16 மெகாபிக்சல் சென்சார் ஆகும்.
லிஸ்ட்டின் படி , Moto G64 5G ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சத்தை சப்போர்ட் செய்கிறது FM ரேடியோ, Wi-Fi, புளூடூத், GPS, A-GPS, GLONASS, Galileo, Beidu, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை தொலைபேசியில் கிடைக்கும் இணைப்பு விருப்பங்களில் அடங்கும். இது IP52-மதிப்பிடப்பட்ட கட்டமைப்புடன் வருகிறது மற்றும் Dolby Atmos ஆதரவுடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.
Motorola Moto G64 5G இல் 30W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை வழங்கியுள்ளது. இதன் அளவு 161.56×73.82×8.89 mm மற்றும் 192 கிராம் எடை கொண்டுள்ளது
இதையும் படிங்க:Truecaller அறிமுகம் செய்தது Web வெர்சன் இனி கம்ப்யூட்டரிலும் தெரியாத நம்பரை தேட முடியும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile