புதுசு கண்ணா புதுசு Moto G54 5G vs Realme Narzo 60x 5G இந்த இரு பட்ஜெட் போனில் எது பெஸ்ட் ?

புதுசு கண்ணா புதுசு  Moto G54 5G vs Realme Narzo 60x 5G இந்த இரு பட்ஜெட் போனில் எது பெஸ்ட் ?
HIGHLIGHTS

மோட்டோரோலா மற்றும் ரியல்மி புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது,

இரண்டு போன்களும் ஒரே விலையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று நான் இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, எந்த ஃபோன் உங்களுக்கு பெஸ்டாக இருக்கும்.

இந்த மாதம் பல நிறுவங்கள் போட்டி போட்டு கொண்டு பல ஸ்மார்ட்போன்களை  அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் மோட்டோரோலா மற்றும் ரியல்மி புதிய ஸ்மார்ட்போன்  அறிமுகம் செய்துள்ளது, Moto G54 5G ஸ்மார்ட்போன் மோட்டோரோலாவால் அறிமுகப்படுத்தப்பட்டது, இருப்பினும் Realme அதன் Realme Narzo 60x 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு போன்களும் ஒரே விலையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்று நான் இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, எந்த ஃபோன் உங்களுக்கு பெஸ்டாக இருக்கும்.

Moto G54 5G VS Realme Narzo 60x 5G விலையில் எது பெஸ்ட்?

Moto G54 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.15999. இருப்பினும், ICICI பேங்க் கார்டுகளில் போனில் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கிறது, அதன் பிறகு போனின் விலை ரூ.14499 மட்டுமே.

Moto G54 5G VS Realme Narzo

இது தவிர, Realme Narzo 60x 5G ஸ்மார்ட்போன் பற்றி பேசினால், இந்த போன் ரூ.12999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன், 1000 ரூபாய் கூப்பனும் கிடைக்கிறது. இதன் பிறகு போனின் விலை ரூ.11999 ஆக உள்ளது. இந்த போன் Amazon India மற்றும் Realme இன் அதிகாரப்பூர்வ கடையில் விற்பனை செய்யப்பட உள்ளது. Realme Narzo 60x 5G முதல் விற்பனை செப்டம்பர் 15 அன்று நடைபெற உள்ளது.

Moto G54 5G VS Realme Narzo 60x 5G  டிசைன் 

Moto G54 5G ஸ்மார்ட்போன் நவீன Moto G Series Desig டிசைனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிளாஸ்டிக் பேக் கிடைக்கிறது என்றாலும், போன் 3 வெவ்வேறு நிறங்களில் கிடைக்கப் போகிறது. மின்ட் கிரீன், ப்ளூ மற்றும் பேர்ல் ப்ளூ வண்ணங்களில் இந்த போனை வாங்கலாம்.  பின்புற மோட்டோரோலா பிராண்டிங் உள்ளது. போனின் முன்பக்கத்தில் பஞ்ச்-ஹோல் கட்அவுட் இருந்தாலும், அதில் செல்ஃபி கேமரா உள்ளது. IP54 ரேட்டிங் Moto G54 5G யில் கிடைக்கிறது.

இருப்பினும், Realme Narzo 60x 5G ஸ்மார்ட்போன் பற்றி நாம் பேசினால், அது Realme 11x போல் தெரிகிறது. இதைப் பார்க்கும்போது, ​​Realme Narzo 60x 5G ஸ்மார்ட்போன் Realme 11x யின் மறுபெயரிடப்பட்ட வெர்சன்  என்றும் கூறப்படுகிறது. டூயல் டோன் டிசைனில் வந்தாலும் இந்த போனில் பிளாஸ்டிக் பேக் உள்ளது. மொபைலின் கீழ் இடது மூலையில் நார்சோ பிராண்டிங்கைப் பார்க்கப் கிடைக்கும் இது தவிர, செல்ஃபிக்களுக்காக முன்பக்கத்தில் பஞ்ச்-ஹோல் கட்அவுட்டைப் வழங்குகிறது.

Moto G54 5G VS Realme Narzo 60x 5G டிஸ்ப்ளே 

Moto G54 5G ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் IPLS LCD டிஸ்ப்ளே உள்ளது, இது FHD + ரெசல்யூஷனுடன் வருகிறது, மேலும் 120Hz அப்டேட் வீதத்தையும் வழங்குகிறது இந்த போன் ஆண்ட்ராய்டு 13ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Moto G54 display

இது தவிர, Realme Narzo 60x 5G இன் டிஸ்ப்ளே மேலே உள்ள தொலைபேசியைப் போலவே உள்ளது. அதன் அளவு வேறுபட்டாலும். இந்த ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. Realme UI 4.0 யில் Android 13 உடன் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Moto G54 5G VS Realme Narzo 60x 5G: கேமரா 

மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா செட்டிங் கிடைக்கிறது. OIS உடன் இந்த போனில் 50MP கேமரா உள்ளது. 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா இந்த போனில் உள்ளது. போனில் 16எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது.

 Moto G54 camera

Realme Narzo 60x 5G ஸ்மார்ட்போனிலும் இரண்டு கேமராக்கள் உள்ளன. இந்த போனில் 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் உள்ளது. போனில் 8எம்பி செல்ஃபி கேமரா உள்ளது

Moto G54 5G VS Realme Narzo 60x 5G:பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்

மீடியா டெக் டிமன்சிட்டி 7020 ப்ரோசெசரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும், இது தவிர 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ச்டோடேஜ் சப்போர்ட் கொண்டுள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கூடிய இந்த போனில் 6000mAh பேட்டரியும் கிடைக்கிறது.

அதே நேரத்தில் மீடியாடெக் டைமென்சிட்டி 6100+ ப்ரோசெசர் Realme Narzo 60x 5G ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ச்டோரேஜை வழங்கிறது ஃபோனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo