Moto G54 5G யில் 3,000ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுன்ட்

Moto G54 5G யில் 3,000ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுன்ட்
HIGHLIGHTS

கடந்த ஆண்டு இந்தியாவில் மோட்டோ ஜி54 5Gயை அறிமுகப்படுத்தியது.

இந்த ஸ்மார்ட்போனின் விலையை ரூ.3,000 குறைத்துள்ளது

Moto G54 5G ஆனது 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெப்ராஸ் ரேட் வீதத்துடன் 6.5 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் ஆரம்பகால நிறுவனங்களில் ஒன்றான மோட்டோரோலா, கடந்த ஆண்டு இந்தியாவில் மோட்டோ ஜி54 5Gயை அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப விலை ரூ.15,999. நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் விலையை ரூ.3,000 குறைத்துள்ளது. Moto G54 5G ஆனது 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெப்ராஸ் ரேட் வீதத்துடன் 6.5 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

Moto G54 5G குறைக்கப்பட்ட விலை

இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் வெளியீட்டு விலை ரூ.15,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.18,999 ஆகவும் இருந்தது. மோட்டோரோலாவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டில் அவற்றின் விலை முறையே ரூ.13,999 மற்றும் ரூ.15,999.ஆகும்

மோட்டோ G54 5G சிறப்பம்சம்

Moto G54 5G ஆனது 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெப்ராஸ் ரேட் மற்றும் 20:9 ரேசியோவுடன் 6.5-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் ப்ரோசெசரக ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7020 SoC உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1டிபி வரை அதிகரிக்க முடியும். இதன் 6,000 mAh பேட்டரி 33 W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதன் பேட்டரியை 66 நிமிடங்களில் 90 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான My UI 5.0 யில் இயங்குகிறது.

அதன் பின்புற கேமரா மாட்யுல் OIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு என்கில் கேமராவைக் கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள இணைப்பில் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட், வைஃபை மற்றும் புளூடூத் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக பக்கத்தில் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் உள்ளது.

இதையும் படிங்க:Jio VS Airtel Vs VI:ரூ,209 யில் வரும் இந்த திட்டத்தில் எது பக்க மாஸ்?

நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு Razr 40 Ultra மற்றும் Edge 40 Neo ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இதில், Razr 40 Ultra ஆனது Viva Magenta மற்றும் Infinite Black வண்ணங்களில் கிடைக்கும். இதன் பிறகு இந்த ஸ்மார்ட்போன் Glacier Blue வண்ணத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. நிறுவனம் எட்ஜ் 40 நியோவை மூன்று வண்ணங்களில் கிடைக்கச் செய்தது. சமீபத்தில், மோட்டோரோலா இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் புதிய பீச் ஃபஸ் நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo