நீங்கள் இந்த ஆண்டுக்குள் ஒரு பட்ஜெட் விலையில் ஒரு போனை வாங்க நினைத்தால், Moto G45 5G சிறந்த தேர்வாக இருக்கும். Moto G45 5G ஆனது இ-காமர்ஸ் தளமான Flipkart யில் பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது, இதில் பேங்க் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகள் உள்ளன. Moto G45 5G இல் கிடைக்கும் சலுகைகள் மற்றும் சலுகைகள் பற்றி இங்கு விரிவாகச் பார்க்கலாம்.
Moto G45 5G இன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் Flipkart யில் ரூ.12,999 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், IDFC பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது ரூ.1500 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.11,499 ஆக மாறும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.8,950 சேமிக்கலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச நன்மை, எக்ச்செஞ்சில் வாங்கலாம் ஆனால் போனின் தற்பொழுது நிலையை பொருத்தது.
Moto G45 5G ஆனது 720×1600 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது. இந்த போனில் Qualcomm Snapdragon 6s Gen 3 ப்ரோசெசர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14ல் வேலை செய்கிறது. கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், இந்த போனில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. இது முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது.
இது ஒரு பெரிய 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 20W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . டைமென்சன் பற்றி பேசுகையில், இந்த தொலைபேசியின் நீளம் 162.7 mm, அகலம் 74.64 mm, திக்னஸ் 8.0 mm மற்றும் எடை தோராயமாக 183 கிராம். கனேக்சனிற்க்கு , இது புளூடூத் 5.1, Wi-Fi, GPS, USB வகை C போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை உள்ளடக்கியது. செக்யுரிட்டிகாக பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனரும் இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க iPhone 16 Plus யில் செம்ம அதிரடி ஆபர் 5000ரூபாய் வரை டிஸ்கவுன்ட்