Moto G34 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் அம்சங்கள் தெருஞ்சிகாங்க

Updated on 09-Jan-2024
HIGHLIGHTS

Moto G34 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

2024 ஆம் ஆண்டில் அறிமுகமான முதல் லேட்டஸ்ட் 5G போன் மோட்டோ ஸ்மார்ட்போன் இதுவாகும்,

நிறுவனம் ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்குகிறது,

Moto G34 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம், இது நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5G போனாகும், 2024 ஆம் ஆண்டில் அறிமுகமான முதல் மோட்டோ ஸ்மார்ட்போன் இதுவாகும், Moto G34 5G ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் டிஸ்ப்ளே, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. நிறுவனம் இந்த போனில் Snapdragon 695 SoC கொடுக்கப்பட்டுள்ளது பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது, இதன் முக்கிய சென்சார் 50 மெகாபிக்சல் ஆகும்.

Moto G34 5G விலை மற்றும் விற்பனை தகவல்

Moto G34 5G யின் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 10,999 ரூபாயில் இருக்கிறது, இதன் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் கொண்ட டாப் எண்டு மாடலின் விலை 11,999 ரூபாயாக இருக்கிறது, சிறப்பு என்னவென்றால், இந்த போனில் நிறுவனம் ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்குகிறது, அதன் பிறகு போனின் விலை ரூ.9,999 மற்றும் ரூ.10,999 ஆக குறைகிறது. இந்த போன் சார்கோல் பிளாக், ஐஸ் ப்ளூ மற்றும் ஓஷன் கிரீன் கலரில் வருகிறது.

Moto G34 5G விற்பனை ஜனவரி 17 ப்ளிப்கார்ட் மற்றும் ரீச்டோரில் நடைபெறும்.

Moto G34 5G டாப் 5 சிறப்பம்சம்.

Moto G34 5G டிஸ்ப்ளே

இந்த ஃபோனில் 6.5 இன்ச் HD+ (720×1,600 பிக்சல்கள்) LCD டிஸ்ப்ளே உள்ளது. டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ், 20:9 ரேசியோ அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளேவில் பஞ்ச் ஹோல் உள்ளது மற்றும் பாண்டா கிளாஸ் ப்ரோடேக்சன் வழங்கப்பட்டுள்ளது.

ப்ரோசெசர்

இந்த போனில் ஸ்னாப்டிராகன் 695 ப்ரோசெசர் இதில் கொண்டுவரப்பட்டுள்ளது இந்த போனில் இலவச ஸ்டோரேஜ் யின் அடிப்படையில் மெமரியை 16 ஜிபி வரை அதிகரிக்க முடியும் என்று மோட்டோ கூறுகிறது, Moto G34 5G போனில் டுயள் சிம் (நேனோ) ஸ்லோட்டுடன் வருகிறது

கேமரா

Moto G34 5G இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் உள்ள முக்கிய சென்சார் 50 மெகாபிக்சல் ஆகும். இதனுடன், 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. போனில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

moto g34 5g launched in india

ரேம் ஸ்டோரேஜ்

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் பொருத்தப்பட்டுள்ளது, இதில் 128 GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது SD கார்ட் வழியாக 1டிபி வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும்

பேட்டரி

இதன் பேட்டரியை பற்றி பேசுகையில் Moto G34 5G ஆனது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 20W டர்போ பவர் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. சார்ஜர் பெட்டியில் மட்டுமே வருகிறது. சாதனத்தின் எடை 179 கிராம். ஆகும் இது வேகன் லெதர் வெர்சன் 181 கிராம் எடை கொண்டுள்ளது.

இதையும் படிங்க: Amazon Republic Day Sale இந்த ஆண்டின் முதல் விற்பனையில் கீழ் பல ஆபர்கள் வழங்கப்படுகின்றன

கனெக்டிவிட்டி

Moto G34 5G யில் 5G, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத், FM ரேடியோ, GPS/A-GPS, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB Type-C போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்கள் உள்ளன. மேலும் இதில் சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும் போனில் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன, அவை டால்பி அட்மாஸ் ஒலி தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :