Motorola அதன் Moto G34 5G ஸ்மார்ட்போன் இந்தைவில் அறிமுகம் செய்துள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் 6,000mAh யின் பேட்டரியுடன் வருகிறது. இந்த போனின் விலை ரூ.9,000க்கும் குறைவு. Realme, Redmi, Infinix போன்ற பிராண்டுகளுக்கு சவால் விடும் வகையில் Lenovo-க்கு சொந்தமான நிறுவனம் இந்த குறைந்த விலை 4G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பெரிய பேட்டரியுடன், இந்த ஸ்மார்ட்போனில் 50எம்பி கேமரா, 8ஜிபி ரேம் வரை போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மோட்டோரோலாவின் இந்த புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்…
Moto G24 Power இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது – 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி. இந்த போனின் அடிப்படை அதாவது ஆரம்ப வேரியண்டின் விலை ரூ.8,999. அதே நேரத்தில், அதன் டாப் வேரியண்ட் ரூ.9,999க்கு வருகிறது. நீங்கள் அதை இரண்டு கலர் விருப்பங்களில் வாங்கலாம் – மை நீலம் மற்றும் பனிப்பாறை நீலம். இந்த போனை வாங்கினால் ரூ.750 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் முதல் விற்பனை பிப்ரவரி 7 ஆம் தேதி இ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலாவின் இ-ஸ்டோரில் நடைபெறும்.
இந்த போனின் சிறப்பம்சம் பற்றி பேசினால், Moto G24 Power ஆனது 6.56-இன்ச் IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதில் HD+ ரெசல்யூஷன், 90Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 500 nits வரை ஹை ப்ரைட்னஸ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் MediaTek Helio G85 SoC உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 30W டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் இது தவிர இந்த போனில் 6,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/8ஜிபி ரேம் உள்ளது, இதை விர்ச்சுவல் ரேம் மூலம் 8ஜிபி வரை அதிகரிக்க முடியும். மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: iQoo Neo 7 Pro அதிரடி குறைப்பு ஆனால், இந்த தேதி வரை தான்
கேமரா பற்றி பேசுகையில் இந்த ஸ்மார்ட்போனில் 50 மேகபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மேகபிக்சல் மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதன் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான My UX கஸ்டம் ஸ்கின்னில் வேலை செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மாஸ் சப்போர்டுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி விருப்பங்களில் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் புளூடூத் 5.0 ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக, இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தண்ணீர் மற்றும் தூசிக்கு எதிரான பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் IP52 ரேட்டிங்கில் வருகிறது.