மோட்டோரோலா தனது புதிய குறைந்த விலை மொபைலான Moto G13 ஐ மார்ச் 29 புதன்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபோனில் MediaTek Helio சிப்செட் மற்றும் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா செட்டிங் உள்ளது. போன் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவுடன் மெலிதான மற்றும் பிரீமியம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. Moto G13 5,000 mAh பேட்டரி மற்றும் இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போனின் விலை மற்றும் பிற விவரக்குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்…
புதிய மோட்டோ G13 ஸ்மார்ட்போன் மேட் சார்கோல் மற்றும் புளூ லாவெண்டர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 499 என்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 5 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது.
புதிய மோட்டோ G13 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் LCD ஸ்கிரீன், 1600×720 பிக்சல் ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்பேளே மத்தியில் பன்ச் ஹோல் வழங்கப்பட்டு இருக்கிறது. மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர் கொண்டிருக்கும் மோட்டோ G13 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கிறது.
Moto G13 4G கேமரா செட்டிங்கை பற்றி பேசினால் இதில் ட்ரிப்பில் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, போனில் 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால், அதில் 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது