வெறும் 7 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான Motorola மாஸான போன்

வெறும் 7 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான Motorola மாஸான போன்
HIGHLIGHTS

Motorola தனது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனான Moto G04 இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி வகைகளில் வந்துள்ளது

இதன் விலை முறையே ரூ.6,999 மற்றும் ரூ.7,999. Flipkart, Motorola வெப்சைட் மற்றும் முன்னணி ரீடெய்ல் கடைகள் மூலம் பிப்ரவரி 22 முதல் வாங்கலாம்.

Motorola தனது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனான Moto G04 இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோ ஜி 34 மற்றும் ஜி 24 பவருக்குப் பிறகு இந்த ஆண்டு வெளியிடப்படும் மூன்றாவது மோட்டோரோலா போன் இதுவாகும். புதிய G04 இன் சில அம்சங்களில் 90Hz டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி மற்றும் சமீபத்திய ஆண்ட்ராய்டு வெர்சன் ஆகியவை அடங்கும். இந்த போனின் சிறப்பம்சம் மற்றும் விலை தகவலை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Motorola Moto G04 விலை மற்றும் விற்பனை

இந்த போனின் விலை பற்றி பேசுகையில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி வகைகளில் வந்துள்ளது, இதன் விலை முறையே ரூ.6,999 மற்றும் ரூ.7,999. Flipkart, Motorola வெப்சைட் மற்றும் முன்னணி ரீடெய்ல் கடைகள் மூலம் பிப்ரவரி 22 முதல் வாங்கலாம். இந்த நான்கு நிழல்கள்; கான்கார்ட் பிளாக், சீ கிரீன், சாடின் ப்ளூ மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு கலர்களில் கிடைக்கும்.

Moto G04 சிறப்பம்சம்

இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் வாட்டர் ரீப்லேன்ட் பாடியுடன் வருகிறது. இது HD+ ரேசளுசன் மற்றும் 90Hz ரெப்ராஸ் ரேட் வழங்கும் 6.5-இன்ச் LCD பேனலைக் கொண்டுள்ளது. செக்யுரிட்டிகாக இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் உடன் வருகிறது. செயல்திறனுக்காக, இதில் Unisoc T606 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, இது 8ஜிபி வரை ரேம், 8ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதை தவிர இந்த போன் My UX யில் வேலை செய்கிறது, இது ஆண்ட்ராய்டு 14 OS அடிப்படையிலானது. இருப்பினும், இது எந்த ஆண்ட்ராய்டு அப்டேட்களை கிடைக்க போவதில்லை, ஆனால் இது 2 வருட செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்களை வழங்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொலைபேசியை இயக்க, 15W சார்ஜிங்கை சப்போர்ட் உடன் இதில் 5000mAh பேட்டரி இருக்கும் இதில் நிறுவப்பட்டுள்ளது. போட்டோக்ரபி டிப்பர்ட்மேண்டில் செல்ஃபிக்களுக்கான 5 எம்பி முன் கேமரா மற்றும் பின் பேனலில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 16 எம்பி ப்ரைம் கேமரா உள்ளது.

இதையும் படிங்க: Honor புதிய Honor X9b இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, smartwatch மற்றும் earbuds வந்துள்ளது

இதை தவிர இந்த போனில் மற்ற அம்சங்களை பற்றி பேசினால், இதில் இரட்டை சிம் ஸ்லாட், 4G VoLTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் 5.0, GPS, Dolby Atmos சப்போர்டுடன் கூடிய ஒற்றை ஸ்பீக்கர் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo