Moto G Power 5G 50MP கேமரா, 6GB RAM உடன் அறிமுகம்.

Moto G Power 5G 50MP கேமரா, 6GB RAM உடன் அறிமுகம்.
HIGHLIGHTS

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Motorola விரைவில் Moto G Power 5G அமெரிக்க சந்தையில் கொண்டு வரவுள்ளது.

Motorola அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன் கம்பெனியின் சமீபத்திய ஜி-சீரிஸின் கீழ் வரும்.

இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு வந்த Moto G Power 4G மாடலுக்குப் பதிலாக வரும்.

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Motorola விரைவில் Moto G Power 5G அமெரிக்க சந்தையில் கொண்டு வரவுள்ளது. Motorola அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன் கம்பெனியின் சமீபத்திய ஜி-சீரிஸின் கீழ் வரும். இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு வந்த Moto G Power 4G மாடலுக்குப் பதிலாக வரும். Moto G Power 5G யின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள், விலை போன்றவற்றைப் பற்றி இங்கு விரிவாகக் கூறுகிறோம்.

Moto G Power 5G விலை மற்றும் கிடைக்கும் தன்மை

விலையைப் பற்றி பேசுகையில், Moto G Power 5G இன் 6/256GB ஸ்டோரேஜ் வேரியாண்டின் விலை $300 (கிட்டத்தட்ட ரூ. 24,552). அதே நேரத்தில், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமெரிக்காவில் ஏப்ரல் 13 முதல் Motorola.com, Amazon மற்றும் BestBuy ஆகியவற்றில் தொடங்கும். Moto G Power 5G கருப்பு மற்றும் வெள்ளை கலர் விருப்பங்களில் கிடைக்கும்.

Moto G Power 5G யின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்

Moto G Power 5G 6.5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 2400 x 1080 பிக்சல்கள் ரெசொலூஷன், ரிபெரேஸ் ரெட் 120Hz  மற்றும் அஸ்பெக்ட் ரேஷியோ 20: 9. இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 930 5G இல் வேலை செய்கிறது. இந்த Motorola போனில் 5,000 mAh பேட்டரி உள்ளது, இது 15W சார்ஜிங்கை ஆதரிக்கிறது, இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 38 மணிநேரம் வரை நீடிக்கும். பாதுகாப்பிற்காக, இந்த ஸ்மார்ட்போனில் பிங்கர் ரீடர் மற்றும் பேஸ் அன்லாக் உள்ளது.

கேமரா செட்டப்பை பற்றி பேசுகையில், Moto G Power 5G யில் 50MP முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் டெப்த் சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Moto MyUX இல் வேலை செய்யும். ஸ்டோரேஜை பற்றி பேசுகையில், இது 6GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜை கொண்டுள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை விரிவாக்க முடியும்.

பிங்கர் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், பிங்கர்ப்ரின்ட் சென்சார், ஆக்சிலரோமீட்டர் சென்சார், சுற்றுப்புற ஒளி சென்சார், SAR சென்சார் மற்றும் இ-காம்பஸ் சென்சார் ஆகியவை இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளன. டைமென்ஷன்களைப் பற்றி பேசுகையில், இந்த போனியின் நீளம் 163.06, அகலம் 74.8, தடிமன் 8.45 mm மற்றும் எடை 185 கிராம். கனெக்ட்டிவிட்டிற்காக, இந்த போனில் 3.5mm ஹெட்செட் ஜாக் மற்றும் USB Type C 2.0 போர்ட் உள்ளது.

S Raja
Digit.in
Logo
Digit.in
Logo