Moto G Play (2024) அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் தெருஞ்சிகொங்க

Moto G Play (2024) அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் தெருஞ்சிகொங்க
HIGHLIGHTS

Moto G Play (2024) போனை வட அமெரிக்கர் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது,

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படுமா இல்லையா என்பதை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Moto G Play (2024) யின் விலை மற்றும் சிறப்ப்ம்சங்களின் விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

Moto G Play (2024) போனை வட அமெரிக்கர் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ ஜி ப்ளே (2023) ஐ மாற்றும். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படுமா இல்லையா என்பதை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்டில் வேலை செய்கிறது. இந்த போனில் 5,000mAh பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. Moto G Play (2024) யின் விலை மற்றும் சிறப்ப்ம்சங்களின் விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

Moto G Play (2024) யின் விலை மற்றும் விற்பனை தகவல்.

Moto G Play (2024) யின் 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை $149.99 (ஏறத்தாள 12,500 ரூபாயாகும். இந்த போன் அமெரிக்காவில் பிப்ரவரி 8 ஆம் தேதி Amazon.com, Best Buy மற்றும் Motorola.com வழியாக விற்பனைக்கு வரும் மற்றும் பிற ரீடைலர் விற்பனையாளர்களிடம் கிடைக்கும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 26 முதல் கனடாவில் வாங்குவதற்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் சபையர் நீல நிறத்தில் கிடைக்கிறது.

Moto G Play (2024) டாப் சிறப்பம்சம்

Moto G Play டிஸ்ப்ளே

Moto G Play (2024) யில் 6.5 இன்சின் HD+ IPS LCD டிஸ்ப்ளே இருக்கிறது, இதன் ரேசளுசன் 1,600 x 720 இருக்கிறது. இதன் ரெப்ராஸ் ரேட் 90Hz மற்றும் இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடேக்சன் உடன் வருகிறது.

ப்ரோசெச்சர்

ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இந்த ஸ்மார்ட்போனில் Adreno 610 GPU உடன் இணைந்து Qualcomm Snapdragon 680 SoC பொருத்தப்பட்டுள்ளது.

ரேம் ஸ்டோரேஜ்

இந்த மொபைலில் 4ஜிபி ரேம் உள்ளது, இதை 6ஜிபி வரை அதிகரிக்க முடியும். 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13ல் வேலை செய்கிறது.

இதையும் படிங்க:iQOO Neo 9 Pro அறிமுக தேதி வெளியானது 16GB RAM, கொண்டிருக்கும்

கேமரா

Moto G Play (2024) இன் பின்புறம் 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா, குவாட்-பிக்சல் சென்சார் மற்றும் LED ஃபிளாஷ் யூனிட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

பேட்டரி

Moto G Play (2024) ஆனது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 15W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 46 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள் வழங்குகிறது. ஃபோன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிச்டண்டிர்க்காக IP52 ரேட்டிங்கை கொண்டுள்ளது. பரிமாணங்களைப் பற்றி பேசுகையில், போனில் நீளம் 163.82 mm அகலம் 74.96, திக்னஸ் 8.29 mm மற்றும் எடை 185 கிராம்.கனேக்டிவிட்டிக்கு 4G, Wi-Fi, GPS மற்றும் ப்ளூடூத் 5.1 ஆகியவை அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo