Motorola யின் இந்த போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது
Motorola தனது மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் எட்ஜ் 50 ப்ரோவை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ எட்ஜ் 40 நியோவின் விலையை குறைத்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட எட்ஜ் 40 நியோ இரண்டு வகைகளில் வருகிறது
லெனோவாவிற்கு சொந்தமான நிறுவனமான Motorola தனது மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் எட்ஜ் 50 ப்ரோவை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய அறிமுகத்துடன், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ எட்ஜ் 40 நியோவின் விலையை குறைத்துள்ளது. ஸ்மார்ட்போன் ஒரு கர்வ்ட் pOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் மீடியாடெக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனனது ஒரு வேகன் லெதர் பின்புறம் உள்ளது மற்றும் IP68 ரேட்டிங் கொண்டுள்ளது இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெஸிச்டன்ட் இருக்கும்
Motorola Edge 40 Neo New Price
கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட எட்ஜ் 40 நியோ இரண்டு வகைகளில் வருகிறது – 8GB + 128GB மற்றும் 12GB + 256GB, இது முறையே ரூ.23,999 மற்றும் ரூ.25,999 விலையில் உள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது, அதன் பிறகு வாடிக்கையாளர்கள் 8ஜிபி பதிப்பை ரூ.22,999க்கும், 12ஜிபி மாறுபாட்டை ரூ.24,999க்கும் வாங்கலாம். இந்த போன் Soothing Sea மற்றும் Cane Bay கலர் விருப்பங்களில் வருகிறது.
Edge 40 Neo Specifications
மோட்டோவின் இந்த ஸ்மார்ட்போன் 6.55-इंच FHD+ டிஸ்ப்ளே உடன் வருகிறது இது 1080 x 2400 பிக்சல் ரெசளுயுசன் கொண்டுள்ளது, மேலும், இந்தத் திரையானது 144Hz புதுப்பிப்பு வீதத்தையும் 1300 நிட்கள் வரையிலான ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது.
இது ஒரு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆகும், இந்த ஸ்மார்ட்போனில் ஒரு மீடியாடேக் டிமன்சிட்டி 7030 சிப்செட் கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் டூயல் சிம் ஆதரவுடன் வருகிறது. இது தவிர, புகைப்படம் எடுப்பதற்காக, இந்த போனில் 50MP ப்ரைம் கேமரா, 13MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.
இந்த போன் Dolby Atmos சப்போர்டுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இது IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிச்டன்ட் . ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரியில் இயங்குகிறது, இது 68W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது
இதையும் படிங்க: Motorola Edge 50 Pro அறிமுகம் AI கொண்டிருக்கும் இதன் டாப் அம்சங்கள் பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile