Moto E22s ஸ்மார்ட்போன் இந்தியாவில் 8,999, ரூபாயின் விலையில் 90Hz டிஸ்பிளே உடன் அறிமுகம்.
மோட்டோரோலா தனது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் தொடர்ந்து வழங்கி வருகிறது
கம்பெனி இந்தியாவில் E சீரிஸின் கீழ் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் Moto E22s அறிமுகப்படுத்தியுள்ளது
கம்பெனி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலக சந்தையில் Moto E22s அறிமுகப்படுத்தியது என்பதை அறிவோம்.
ஸ்மார்ட்போன் பிராண்டான மோட்டோரோலா தனது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் தொடர்ந்து வழங்கி வருகிறது. இப்போது கம்பெனி இந்தியாவில் E சீரிஸின் கீழ் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் Moto E22s அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் 90Hz ரிபெரேஸ் ரேட் மற்றும் 5,000mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கம்பெனி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலக சந்தையில் Moto E22s அறிமுகப்படுத்தியது என்பதை அறிவோம்.
Moto E22s யின் விலை
இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் ப்ளூ மற்றும் ஈகோ பிளாக் கலரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் சிங்கள் ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது, அதன் 64GB ஸ்டோரேஜ் மற்றும் 4 GB ரேம் விலை ரூ.8,999. கம்பெனி அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் இ-காமர்ஸ் ப்ளட்போர்ம் ப்ளிப்கார்ட்டில் இருந்து இந்த போனை வாங்கலாம்.
Moto E22s யின் ஸ்பெசிபிகேஷன்
போனில் 6.5 இன்ச் HD + IPS LCD டிஸ்ப்ளே உள்ளது, இது பஞ்ச்ஹோல் டிசைன் மற்றும் 90Hz ரிபெரேஸ் ரேட் உடன் வருகிறது. மொபைலில் ஆண்ட்ராய்டு 12 உடன், ஸ்டாக் ஆண்ட்ராய்டின் அனுபவம் கிடைக்கிறது. செப்பிட்டிற்காக சைடுமௌன்டேட் பிங்கர் பிரிண்ட் உள்ளது. Moto E22s ஆனது MediaTek Helio G37 ப்ரோசிஸோர் மற்றும் 4GB RAM உடன் 64GB ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்கிறது. மைக்ரோ SD கார்டின் உதவியுடன் ஸ்டோரேஜ் 1TB வரை விரிவாக்கலாம்.
Moto E22s யின் கேமரா
Moto E22s இல் டூவல் கேமரா செட்அப் கிடைக்கிறது, இதில் 16-மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் டெப்த் கேமரா கிடைக்கிறது. செல்பிக்கு 8 மெகாபிக்சல் பிரான்ட் கேமரா உள்ளது. LED பிளாஷ் பேக் கேமராவுடன் சப்போர்ட் செய்கிறது.
Moto E22s யின் பேட்டரி
Moto E22s ஆனது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 10W சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. பேட்டரியைப் பொறுத்தவரை, ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்களுக்கு போனை யூஸ் செய்ய முடியும் என்று கம்பெனி கூறுகிறது. டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.0 மற்றும் 3.5மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவை போனில் கனெக்ட்டிவிட்டிக்கு சப்போர்ட் செய்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile