புதிய வேரியண்டை அறிமுகம் Moto E13 இது Sky Blue நிறத்தில் இருக்கும்

Updated on 29-Sep-2023
HIGHLIGHTS

Moto E13 இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் ஒரு என்ட்ரி லெவல் போனாக அறிமுகம் செய்தது

Moto E13 இப்பொழுது ஒரு புதிய ஸ்கை ப்ளூ வேரியன்ட் அறிமுகம்

இதன் அசல் விலையான ரூ.8,999க்கு பதிலாக ரூ.6,749 பண்டிகை சிறப்பு விலையில் வாங்கலாம்

Moto E13 இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் ஒரு என்ட்ரி லெவல் போனாக அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போனின் அறிமுகத்தின் போது, ​​இது 2ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் ஆரம்ப விலை ரூ.6,999. இந்த ஸ்மார்ட்போன் அரோரா கிரீன், காஸ்மிக் பிளாக் மற்றும் க்ரீமி ஒயிட் ஆகிய மூன்று நிற விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்டில், நிறுவனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கிய Moto E13 யின் மற்றொரு ஸ்டோரேஜ் உள்ளமைவை அறிமுகப்படுத்தியது. Moto E13 இப்பொழுது ஒரு புதிய ஸ்கை ப்ளூ வேரியன்ட் அறிமுகம் செய்துள்ளது இப்போது, ​​​​ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை 2023 க்கு சில நாட்களுக்கு முன்பு, நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் ‘ஸ்கை ப்ளூ’ நிற வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் ட்விட்டரில் ஒரு போஸ்டின் மூலம் மோட்டோ E13 யின் ஸ்கை ப்ளூ ஷேட் அறிமுகப்படுத்தப்படுவதாக மோட்டோரோலா இந்தியா வியாழக்கிழமை அறிவித்தது. அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்க உள்ள பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2023 க்கு சில நாட்களுக்கு முன்பு இந்த புதிய வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Moto E13

Moto E13 New வேரியன்ட் விலை தகவல்

X யில் உள்ள போஸ்டின் படி, Moto E13 யின் ஸ்கை ப்ளூ விருப்பம் Flipkart, Motorola வெப்சைட்டின் மற்றும் ரீடைலர் விற்பனை நிலையங்களில் வாங்குவதற்குக் கிடைக்கும். இதன் அசல் விலையான ரூ.8,999க்கு பதிலாக ரூ.6,749 மட்டுமே பண்டிகை சிறப்பு விலையில் வந்துள்ளது. ட்ரேன்செக்சனுக்கு ICICI பேங்க் கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்ட் அல்லது கோடக் மஹிந்திரா பேங்க் கார்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி பயனர்கள் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம்.

இதற்கிடையில், Flipkart Big Billion Days Sale 2023 அடுத்த மாதம் 8 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி வரை நடைபெறும். Flipkart Plus மெம்பர்கள் இந்த விற்பனைக்கு 24 மணிநேரம் முன்னதாகவே அணுகுவார்கள்.

Motorola E13 சிறப்பம்சம்

டிஸ்ப்ளே

Moto E13 இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் டிச்ப்லேவை பற்றி பேசினால், இது 20:9 ரேசியோ 6.5 இன்ச் IPS LCD ஸ்க்ரீனை வழங்குகிறது.

ப்ரோசெசர்

Moto E13 யில் ப்ரோசெசருக்கு இந்த ஸ்மார்ட்போனில் octa-core Unisoc T606 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது.

Moto E13

கேமரா

இந்த போனின் கேமராவை பற்றி பேசுகையில் 13 மெகாபிக்சல் ப்ரைம் பின்புற கேமராவுடன் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 5 மெகாபிக்சல் முன் சென்சார் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் இயங்குதளத்தில் இயங்குகிறது.

பேட்டரி

பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 23 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் சப்போர்ட் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :